பிபிசி நிறுவனத்தில் இருந்து அஸாம் அமீன் இராஜினாமா

Rihmy Hakeem
By -
0
பிபிசி சிங்கள சேவைப்பிரிவின் இலங்கை செய்தி நிருபர் அஸாம் அமீன் தனது பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் 1 ஆம் திகதி முதல் அவர் பிபிசி செய்தி சேவையில் இருந்து விலகுவதற்காக எழுத்து மூலமான கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

இருப்பினும் பிபிசி நிறுவனம் அந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டிருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் அஸாம் அமீன் கலந்துரையாடிய குரல் பதிவு ஒன்றை கடந்த 19 ஆம் திகதி சிங்களே அமைப்பு வெளியிட்டு இருந்தது.

பின்னர் இதனை கருத்திற் கொண்ட பிபிசி நிறுவனம் அவரது இராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விடயம் தொடர்பில் எமது செய்திப்பிரிவிற்கு கருத்து தெரிவித்த அஸாம் அமீன், தான் தொடர்ந்தும் பிபிசி நிறுவனத்தில் ஊழியர் இல்லை என தெரிவித்துள்ளார்.

அததெரண 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)