“மூன்றில் இரண்டு பெரும்பான்மையை தடுப்பதற்கு ஒன்றிணைந்து செயற்படுவது அவசியம்” - Dr.ஹுஸ்னி

Rihmy Hakeem
By -
0
“மூன்றில் இரண்டு பெரும்பான்மையை தடுப்பதற்கு ஒன்றிணைந்து செயற்படுவது அவசியம்”

Dr.ஹுஸ்னி ஜாபிர் – செயலாளர், சமாதானம் மற்றும் நல்லிணக்கத்துக்கான நிலையம்

பன்மைத்துவ சிந்தனையை ஆதரிக்காத சக்திகள் 2020 பாராளுமன்ற தேர்தலில் மிகப் பெருமளவு ஆசனங்களுடன் வெற்றி பெறுவதற்கான அடையாளங்கள் தெளிவாகத் தென்படுகின்றன. அப்படியான சக்திகள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்று விட்டால் 19 ஆம் திருத்தச் சட்ட மூலம், தகவல் அறியும் சட்டம் போன்ற ஜனநாயக வெற்றிகள் மீண்டும் இல்லாமலாக்கப்படலாம்.

எனவே அவ்வாறான சக்திகள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை தடுப்பதற்கு ஒன்றிணைந்து செயற்படுவது அவசியம் ஆகின்றது. தேர்தலின் பின்னர் பதவிகளுக்காக பணத்துக்காக தத்தமது ஃபைல்களை பாதுகாத்துக் கொள்வதற்காக கட்சி மாறுவதற்கு வாய்ப்பு உள்ள தேசிய கட்சிகள் பிராந்தியக் கட்சிகள் சமூகங்களைப் பிரதி நிதித்துவப்படுத்தும் கட்சிகள் போன்றவற்றுக்கு வாக்களிப்பதை தவிர்த்து, பன்மைத்துவ சிந்தனைக்காகவும், ஜனநாயக உரிமைகளுக்காகவும் உறுதியாக நிலைத்து பலமாக குரல் கொடுக்கக் கூடிய சக்திகளை பாராளுமன்றத்திற்கு அனுப்புவது அவசியமாக இருக்கின்றது. எந்த ஒரு கட்சியிலும் நிலையான உறுப்புரிமை பெறாத, மிதக்கும் வாக்காளர்கள் என்று அழைக்கப்படும் அனைவரும் ஒருமித்து ஆதரிக்கக் கூடிய சக்தி ஒன்று தேர்தலில் நிற்குமாக இருந்தால் அவ்வாறான சக்திகளை வெற்றி பெறச் செய்வதற்காக எமது வாக்குகளை பயன்படுத்துவது ஏற்படப்போகும் நஷ்டங்களை குறைக்கும்.

(Meelparvai)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)