என் நன்றிகொண்டார்க்கும்............ ஜிப்ரி Sir
என்ற சகாப்த்தம்.
என்ற சகாப்த்தம்.
அறிவிப்பாளர் இர்ஷாத் ஏ காதரின் செய்திவரும் போது நள்ளிரவு 12.17 . இந்தநேரத்தில் அழைப்பு வருவது ஏன் என்பதை உறுதியாக ஊகிக்கமுடிந்தது. ஜிப்ரி சேர்................... என்றார். ஒரு நிமிடம் யாரோ அறைந்ததைப் போல இருந்தது.
பேஸ்புக், வட்ஸ் அப் வழியாக செய்திகள் விரைந்துகொண்டிருந்தன. பொழுது விடிந்ததும். இன்று காலை 6.30 அளவில் இளநெஞ்சன் முர்ஷிடீன் அழைப்பை எடுத்து அழுதுவிட்டார். அனுதாபச் செய்திகளையும் ஆங்காங்கே காணமுடிந்தது. ஒவ்வொரும் ஜிப்ரி என்ற ஆளுமையினால் கவரப்பட்டவர்கள் என்பவை அவை தெளிவாகவே எடுத்துச்சொல்லிவிட்டன.
இலங்கை வானொலியில் பயிலுனராக இணைந்துகொண்ட போது ஒலிபரப்புத் துறை ஜாம்பவான்களை முதல்தடவையாகக் கண்டேன். வீ.ஏ திருஞானசுந்தரம், சற்சொருபவதிநாதன், ராஜேஸ்வரிசன்முகம், நடராஜ ஐயர் போன்ற பெரும் ஆளுமைகளுக்கு அருகில் அமர்ந்து பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது.
சற்சொருபவதிநாதன், ராஜேஸ்வரிசன்முகம் போன்ற பெரும் ஆளுமைகள் நாம் எழுதிய செய்திப் பிரதிகளை வாசித்தார். மாலை 6.00 மணி செய்தித் தயாரிப்புப் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்த போது திடீரென 'ஜிப்ரி சேர்' புன்முறுவலுடன் உள்ளே நுழைந்தார். வாசித்தார். "செய்தி நல்ல Flow வில் இருந்தது" என்று வாழ்த்திவிட்டுச் சென்றார்.
குறைந்தது ஒரு மணித்தியாலத்திற்கு முன்பே வந்துவிடுவார். பரந்த வாசிப்பாளர் அவர். வானொலியில் கொடிகட்டிப் பறந்த ஆளுமை. தவறுகள இருந்தால் கூட '
இதை இப்படி மாற்றி வாசித்தால் என்ன ? என்று ஆலோசனை கேட்பார்.
செய்தி ஆசிரியரிடம் கேட்பதற்கு அவர் தயங்குவதில்லை.
புதிய விடயங்கள் பற்றி தெரிந்தால் அதனை அப்படியே ஒரு தாளில் எழுதிக்கொள்வார். கேட்டால் சொல்லித்தருவார்;.
சில மாதங்களுக்கு முன்னர் ஏதேச்சையாக SLB. வரவேற்பு கருமபீடத்திற்கு அருகில் அவரை சந்தித்தேன். '' இரவு தூங்கிவிட்டு காலையில் எழுந்துவிடுவேனா' என்பது சந்தேகம் என்றார்.
திருமண நிகழ்வில் கலந்துகொள்ளுமர்று விடுத்த அழைப்பை மகிழ் ச்சியோடு ஏற்றுக்கொண்டார். ஆனால் அவருக்கு உடல் நிலை இடம்தரவில்லை.
இந்தப் புகைப்படத்தை எமது சிரேஷ்ட அறிவிப்பாளர் சட்டத்தரணி ஏ.எம்.தாஜ் அனுப்பிவைத்திருந்தார். 2014ம் ஆண்டு ஹஜ் பெருநாள் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போது எடுத்துக்கொண்ட படம் இது. என்னையும், ஜூனைட் எம் ஹாரிஸையும், செய்யித் மபாஹிர் மௌலானா ஊடாக தொலைக்காட்சியில் அறிமுகம் செய்து வைத்த பெருமை அவர்களைச் சாரும்.
நாம் தொடர்ச்சியாக செய்துவந்த 'விடியும்வேளை' நிகழ்ச்சியை பொதுவெளியில் நாம் இல்லாத இடங்களில் அவர் பாராட்டிப் பேசியிருக்கின்றார்.
கல்முனை சாஹிராவின் அதிபராக இருந்து ஊருக்கு சேவையாற்ற வேண்டும் என்று எண்ணியிருந்தார்; ஆனால் அரசியில் மேலாதிக்கம் அவரை தொடர்ந்து தூர தள்ளிக்கொண்டே இருந்தது.
அவருடன் பல தடவைகள் ஒன்றாக இருப்பதற்கான வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. ஐவேளைத் தொழுகையை மிகவும் பேணுதலாக பின்பற்றிவந்தார்.
அடுத்த மனிதர் பற்றி நல்லெண்ணம் வைத்திருந்தார். தான் பெற்ற அறிவினால் சகல பிள்ளைகளும் பயன்பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். பிரதேச மத பேதங்கள் கடந்த மனிதனாக வாழ்ந்துகாட்டினார்
நல்ல ஒரு மனிதனை தமிழ் பேசும் சமூகம் இழந்திருக்கிறது. இறைவன் அவர்களது சேவைகளை ஏற்று உயர்ந்த சுவர்க்கத்தை வழங்குவானாகவும்;
Fazhan Nawas
News Editor - SLBC

