மஹிந்தவின் செயற்பாடுகள் காரணமாகவே UNP இல் இணைந்தேன் - லியனகே எம்பி

Rihmy Hakeem
By -
0


அரசமைப்புக்கு எதிரான பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் செயற்பாடுகளே, தான் ஐ.தே.கவில் இணையக் காரணமென, புதிதாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பெற்ற வருண லியனகே தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் வருண லியனகே, நாடாளுமன்றத்தின் இன்று, எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்துக்கொண்டார்.
மஹிந்த ராஜபக்‌ஷவின் அரசமைப்புக்கு எதிரானச் செயற்பாடுகளால், தான்அதிருப்தி அடைந்ததாகவும் இதனாலேயே, தான் ஐ.தே.கவில் இணைந்து கொண்டதாகவும், தனது முதலாவது நாடாளுமன்ற உரையில் அவர் தெரிவித்தார்.
மேலும், எதிர்வரும் தேர்தலில் ஐ.தே.கவின் சார்பிலேயே நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் கூறிய அவர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை பிரதமராக்குவதற்காகத் தான் செயற்படுவதாகவும் கூறினார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)