உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – 12 விசேட குழுக்கள் விசாரணை

Rihmy Hakeem
By -
0
உயர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பா Nமுற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளில் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
பொலிஸ் தலைமையகத்தில் கடந்த புதன் கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதுதொடர்பாக இவர் மேலும் தெரிவிக்கையில்,
சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் பயங்கரவாத விசாரணைப் பிரிவு கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு உட்பட 12 விசேட குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளன. இந்த விசாரணை நடவடிக்கைகளுக்கு அமெரிக்காவின் எவ்பிஐ நிறுவனம் , அவுஸ்திரேலியாவின் பிராந்திய பொலிஸ் உட்பட சர்வதேச நிபுணர்களின் ஒத்துழைப்புகளும் கிடைத்துரளளதாகவும் கூறினார்.;.

சம்பவத்துடன் நேரடியாகவும்இ மறைமுகமாகவும் தொடர்புடைய அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்த பொலிஸார் எதிர்பார்ப்பதாக குறிப்பிட்ட அவர் இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 153 பேர் தொடர்ந்தும் பொலிஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். மாலைதீவை சேர்ந்த நான்கு பேர் தொடர்பிலும் விசாரணை இடம்பெறுகின்றது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட சந்தேகநபர்களின் பல சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்காலத்தில் அவை அரச உடைமையாக்கப்படவுள்ளதாகவும் கூறினார்.
அரசாங்க தகவல் திணைக்களம்

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)