140 வருடங்களாக நடைபெற்று வரும் ரோயல் - தோமஸ் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் SSC இல்

Rihmy Hakeem
By -
0
கொழும்பு றோயல் கல்லூரிக்கும் கல்கிசை சென் தோமஸ் கல்லூரிக்கும் இடையில் 141 ஆவது முறையாக நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் 11 ஆம் திகதி தொடக்கம் 14 ஆம் திகதி வரை கொழும்பு எஸ் எஸ் சி விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
அமரர் டி எஸ் சேனநாகக்க ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணத்துக்காக இந்த போட்டி இடம்பெறவுள்ளது.
சர்வதேச ரீதியில் தொடர்ச்சியாக நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் இது 2 ஆவது இடத்தை கொண்டுள்ளது. இதன் முதலாவது போட்டி 1880 ஆம் ஆண்டு காலிமுகத்திடலில் இடம்பெற்றது. இந்த இடத்தில் தற்பேலாது தாஜ் சமுத்ரா ஹோட்டல் நிர்மாணிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
அரசாங்க தகவல் திணைக்களம்

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)