2 வார காலத்திற்குள் அரசாங்க வைத்தியசாலைகளில் வாகன அனுமதி பத்திரத்துக்கான பரிசோதனை வசதி

Rihmy Hakeem
By -
0
இலகு வாகன சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ளும் போது தேவையான வைத்திய பரிரோதனையை அரசாங்க வைத்தியசாலைகளில் மேற்கொள்வதற்காக வசதிகள் இரண்டு வாரத்திற்குள் ஆரம்பிக்கப்படும் என்று போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.
இராஜாங்க அமைச்சர் திலும் அமுலுகம இது தொடர்பாக தெரிவிக்கையில் சம்பந்தப்பட்ட வைத்தியசாலைகளுக்கு இந்த வைத்திய பரிசோதனையை மேற்கொள்வதற்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
வெரஹெரவில் அமைந்துள்ள மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் பொதுமக்களுக்கு வழங்கும் சேவை முறையான வகையில் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)