வெளிநாட்டில் வேலை செய்யும் மேல் மாகாண பணியாளர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்கள்

Rihmy Hakeem
By -
0
வெளிநாடுகளில் தொழில்புரியும் பணியாளர்களின் பிள்ளைகளுக்கு பிரதமர் தலைமையில் புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் வெளிநாட்டில் தொழில்புரிவோரின் பிள்ளைகளுக்காக வருடாந்தம் வழங்கப்படும் இடம்பெயர்ந்தோரின் பிள்ளைக்ளுக்கான புலமைப்பரிசில் வேலைத்திட்டத்தில் மேல் மாகாண மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
அலரிமாளிகையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விசேட விருந்தினராக கலந்துகொள்ளவுள்ளார். 734 மாணவர்களுக்கு 18,505,000.00 பெறுமதியான புலமைப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.
தரம் 5 புமைப்பரிசிலில் சித்தி எய்திய 175 மாணவர்களுக்கு தலா 20,000 ரூபா வீதம் 3,500,000.00 பெறுமதியான புலமைப்பரிசில்களும் கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையில் சித்தி எய்திய 456 மாணவர்களுக்காக தலா 25,000 ரூபா வீதம் 11,400,000.00 புலமைப்பரிசிலும் வழங்கப்படவுள்ளது.
இதே போன்று பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்ற 103 மாணவர்களுக்கு தலா 35 ரூபா வீதம் 3,605,000.00 பெறுமதியான புலமைப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளது.
இதற்கு அமைவாக 2019 ஆம் ஆண்டில் நாட்டில் 9 மாகாணங்களை உள்ளடக்கிய வகையில் இடம்பெயர்ந்த பணியாளர்களின் 3,489 மாணவர்களுக்கு 87,265,000.00 பெறுமதியான புலமைப்பரிசில்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சென்றுள்ள பணியாளர்களின் பிள்ளைகளுக்காக 1996 ஆம் ஆண்டில் இருந்து 23 வருட காலம் இந்த புலைப்பரிசில்கான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
அனிறில் இருந்து இன்றுவரையில் 44,832 மாணவர்களுக்காக 897,425,000,00 ரூபா புலமைப்பரிசிலாக வழங்கப்பட்டுள்ளது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)