புதையல் தோண்டிய இராணுவ உயரதிகாரி உட்ப 21 பேர் கைது

Rihmy Hakeem
By -
0
-சுப்பிரமணியம் பாஸ்கரன், மு.தமிழ்ச்செல்வன்    
கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டைக்காடு பகுதியில், புதையல் தோண்ட முற்பட்ட இராணுவ உயரதிகாரி உட்பட்ட 21 பேரை,  விசேட அதிரடிப்படையினர், இன்று (09) கைது செய்துள்ளனர்.
கைதுசெய்யப்படவர்களிடம் இருந்து புதையல் தோண்டுவதற்கான பூஜை பொருள்கள், ஸ்கானர் இயந்திரம் உள்ளிட்ட பல பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு கைதுசெய்யப்படவர்களில் 5 இராணுவ அதிகாரிகளும் 5 இராணுவ வீரர்களும், 13 சிங்களவர்களும் 3 தமிழர்களும் உள்ளடங்குகின்ற​னரென, தர்மபுரம் பொலிஸார் கூறினர்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)