72 ஆவது தேசிய சுதந்திர தின வைபவம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தலைமையில் கொழும்பு 07, சுதந்திர சதுக்கத்தில் இன்று நடைபெறுகிறது.
கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து நடைபெறும் முதலாவது சுதந்திர தினக் கொண்டாட்டம் இதுவாகும். மக்களுக்கு ஏற்படக்கூடிய இடையூறுகளைக் குறைக்கும் நோக்கத்துடன் இம்முறை சுதந்திர சதுக்கத்தில் தேசிய சுதந்திர தின விழா நடைபெறுகிறது
கி.பி 1505 ஆம் ஆண்டில் போர்த்துக்கேயரினால் இலங்கையின் கரையோர பிரதேசம் கைப்பற்றப்பட்டது இதனைத்தொடர்ந்து கி.பி 1602 ஒல்லாந்தரின் ஏகாதிபத்தியத்துக்கு இலங்கையர்கள் அடிமைப்பட வேண்டி ஏற்பட்டதுடன், கி.பி 1766 ஆம் ஆண்டளவில் பிரித்தானியரின் ஆக்கிரமிப்பின் காரணமாக கந்த உடரட்ட சிங்களவர்கள் என்று அழைக்கப்படும் மலைநாட்டு சிங்கள மக்களைத் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் வாழ்ந்த இலங்கை மக்களும் மீண்டும் அடிமை நிர்வாகத்திற்கு உட்பட வேண்டி ஏற்பட்டது.
கந்த உடரட்ட சிங்களவர்கள் என்று அழைக்கப்படும் மலைநாட்டு சிங்கள மக்களின் பிளவு அதிகார குழுக்களினால் 1815 ஆம் ஆண்டளவில் உடரட்ட என்ற மலையகப் பிரதேசத்தையும் எந்தவித சிரமமுமின்றி பிரிட்டன் தமது நிருவாகத்திற்கு உட்படுத்தியது.. இதன் பின்னர் முழு இங்கையும் ஆங்கிலேயரின் நிருவாகத்திற்குள் கொண்டுவரப்பட்டது.
இலங்கையர்களின் சுதந்திரப் போராட்டம் இங்கிருந்தே ஆரம்பமாகின்றது என்று கூறலாம். 1818 ஆம் ஆண்டு உடரட்ட என்ற மலையக பெருங்கலகம், 1823 ஆம் ஆண்டு கொஸ்வத்தை கிளர்ச்சி, 1826ஆம் ஆண்டு பிம்தென்னே கிளர்ச்சி, 1835 ஆம் ஆண்டு மல்வத்து விகாரையின் கிளர்ச்சி, 1848ஆம் ஆண்டு மாத்தளை பெருங்கிளர்ச்சி முதலான கிளர்ச்சிகள் ஆரம்பமானவை நாட்டு மக்கள் இழந்த சுதந்திரத்தை மீண்டும் பெற்றுக்கொள்ளும் நோக்கத்துடனேயாகும். 1818 ஆம் ஆண்டு கிளர்ச்சியினால் சிறிய அளவில் அல்லது ஆங்கிலேயரின் நிர்வாகத்தில் அவர்களது கொடூரமான நிர்வாகத்தில் தளர்வை ஏற்படுத்தவேண்டி ஏற்பட்டது.
1831ஆம் ஆண்டில் அரசாங்க முறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் கோல்புறுக் ஆணைக்குழுவினர், முதல் முறையாக அவர்களது ஆட்சி முறையில் மறுசீரமைப்பு ஆலோசனையை சமர்ப்பித்தனர். பிரித்தானியர்களின் இந்த முயற்சி பெருமளவில் வெற்றியடையவில்லை.
1848ஆம் ஆண்டு மாத்தளை பெருங்கிளர்ச்சி ஆரம்பமானதுடன் அது இலங்கை சுதந்திர போராட்டத்தின் இறுதி கிளர்ச்சியாக அமைந்தது. 1796ஆம் ஆண்டில் இலங்கையின் ஒரு பகுதி மாத்திரம் பிரிட்டனின் ஏகாதிபத்தியத்திற்கு அடிமைப்படுத்தப்பட்டு இருந்தது. அதன் பின்னர் 1815 ஆம் ஆண்டில் முழு நாடும் பிரிட்டனின் நிர்வாகத்திற்கு உட்பட்டிருந்த யுகம் 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி முடிவிற்கு வந்தது.
1948ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி இலங்கை மக்களுக்கு சுதந்திரம் கிடைத்தது. சுதந்திரம் கிடைத்த பின்னர் கடந்த 72 வருட காலப்பகுதியில் 1948 ஆம் ஆண்டு அரசியல் யாப்பு இரத்து செய்யப்பட்ட பின்னர் இரண்டு அரசியல் யாப்புகள் மூலம் நாடு முன்னெடுக்கப்பட்டது.இதில் முதலாவது 1972 ஆம் ஆண்டில் நிவைவேற்றப்பட்ட மக்கள் குடியரசு யாப்பு ஆகும். அத்தோடு இரண்டாவது 1978 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட அரசியல் யாப்பு அமைப்பாகும்.
வரலாற்றின் ஆரம்பத்தில் இருந்து தாய்நாட்டின் இறைமைக்காக இரத்தம் சிந்தியமை மற்றும் உயிரை தியாகம் செய்தவர்களின் எண்ணிக்கை அளப்பரியதாகும். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் எமது தாய்நாட்டை கட்டுப்படுத்திய நாள் தொடக்கம் நாட்டு மக்கள் சுதந்திரத்திற்காக மேற்கொண்ட அளப்பரிய அர்ப்பணிப்பின் பெறுபேறே இன்று நாம் அனுபவிக்கும் சுதந்திரமாகும். அடிமைப்படுத்தப்பட்ட காலப்பகுதியில் ஏற்பட்ட ஏகாதிபத்திய எதிர்ப்பு கிளர்ச்சி மத்தியில் உயிரை தியாகம் செய்த பத்தாயிரம் பேரான தமிழ், சிங்கள,முஸ்லிம், பறங்கியர் போன்ற நாட்டு பற்றைக் கொண்ட அனைவரதும் அர்ப்பணிப்பையும் நாம் மறந்துவிட் முடியாது. இதன் பெறுபேறாக எதிர்காலத்தில்; பயன்களை பெறுவதற்கு இதற்கான பின்புலத்தை வகுப்பது தற்போதைய யுகத்தின் தேவையாகும். இதனை கருத்திற்கொண்டே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தலைமையிலான சமகால அரசாங்கம் செயல்பட்டுவருகிறது.
நாட்டை கட்டியெழுப்பும் தொலை நோக்கு
2019 ஜனாதிபதி தேர்தலில் நீங்கள் என்னிடம் சவால்மிக்க பாரிய பொறுப்பொன்றை ஒப்படைக்கின்றீர்கள். முதலாவதாக பயங்கரமான தீவிரவாதத்திற்கு முகங்கொடுத்துள்ள எமது தாய்நாட்டை, அதில் இருந்து மீட்டெடுப்பதுடன், எந்தவித அடிப்படைவாதத்திற்கும் தலைதூக்க இடமளிக்காத வகையில் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். அதில் சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற அனைத்து இனத்தவர்களும் ஒரே நாடு, ஒரே சட்டத்தின் கீழ் ஒற்றுமையாக, கௌரவமான பங்காளர்களாக வாழ்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும். அவ்வாறே சட்டவாட்சியை அதன் உண்மையான அர்த்தத்துடன் செயற்படுத்த நாம் வழிவகைகளை மேற்கொள்ள வேண்டும். அனைத்து பிரஜைகளும் சட்டத்தின் முன் சமமாக மதிக்கப்பட வேண்டும். ஏனைய அனைத்து விடயங்களையும் விட நீங்கள் என்னிடம் எதிர்பார்ப்பது இதனைத்தான் என்பதை நான் நன்கு புரிந்துகொண்டுள்ளேன். தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்திய பின் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதென்பது கடினமான சவாலல்ல.
இரண்டாவதாக எமது அழகிய நாட்டில் வாழ்கின்ற அனைத்து இளைஞர் யுவதிகளும் கௌரவமாக வாழக்கூடிய, உறுதிமிக்க சுபீட்சமான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும். அனைவருக்கும் தமது திறமையின் மூலம், இயன்றளவு பயனை பெற்றுக்கொள்ளக்கூடிய தொழிலொன்று காணப்பட வேண்டும். திருப்தியான பிரஜை, மகிழ்ச்சியாக வாழக்கூடிய குடும்பம், மற்றும் சிறந்த பண்பாடுடைய சமூகத்தை உருவாக்குவதே எமது கடமையாகும். உலகெங்கும் இடம்பெறும் இயற்கை அனர்த்தங்களின் விளைவாக ஒரே நேரத்தில் வரட்சி மற்றும் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்படும் மக்களாக நாம் இருக்கின்றோம். எமது இந்த அழகிய திருநாட்டை மீண்டும் ஒரு பசுமையான அழகிய தோற்றத்துடன், எதிர்கால உலகின் சிறப்பான அபிவிருத்தியின் முன்னுதாரணமாகத் திகழவைக்கும் பொறுப்பும் எம்முடையதாகும். இந்நாட்டில் அமைதி என்ற கனவு மீண்டும் நனவாகாது என்று எண்ணியிருந்த யுகத்தில், நாம் சமாதானத்தின் மூலம் அந்தக் கனவை நனவாக்கினோம். அது மட்டுமல்லாது, மீண்டும் அழகிய ஒரு இலங்கை நாட்டை இப்பூமியில் உருவாக்கி உங்களிடம் கையளிப்போம்.
எமது இந்த நாட்டில் ஒரே ஒரு குறை தான் காணப்படுகின்றது. எமது நாட்டின் எதிர்கால முன்னேற்றதிற்காக மிகச்சரியான நோக்குடன் செயற்படும், தைரியமான தலைமைத்துவம் ஒன்று இல்லாமையாகும். நாட்டின் முன் காணப்படும் சவால்களை வெற்றிகொள்ளும் பாரிய பொறுப்பை எனக்கு கையளித்ததை இட்டு நான் உங்களுக்கு எனது நன்றியை தெரிவிக்கின்றேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்காக புகழ்மிக்க அரச தலைவரான மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் வழிகாட்டல் மற்றும் அவரது நெருங்கிய ஒத்துழைப்பை பெற்றுள்ளமை நாம் அடைந்த நிகரற்ற அதிஷ்டமாகும். உங்கள் கனவுகளை நனவாக்க நான் இயன்றளவு தியாகத்துடன் செயற்படுவேன். நீங்கள் அனைவரும் வேண்டுகின்ற சௌபாக்கியமான இலங்கையை உருவாக்க எம்மால் முடியும் என்பதை நான் மிக உறுதியாக நம்புகின்றேன்.
அதற்காக உங்கள் அனைவரினதும் மக்கள் ஆணை (வரம்), பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பை நான் எதிர்பார்க்கின்றேன். எனவே 'நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்குடன்' கைகோர்க்குமாறு வேண்டிக்கொள்கின்றேன்.
அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ
(நாட்டை கட்டியெழுப்பும் தொலைநோக்கு என்ற தலைப்பின் கீழ் பெறப்பட்டதாகும்)
பாதுகாப்பான நாடு - சௌபாக்கிய நாட்டுக்கான பத்தாண்டு கொள்கை
01. தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை
தேசிய பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ள நாட்டில், ஏனைய அனைத்து விடயங்களும் சீர்குலைவதும் மற்றும் அதனுடன் தேசிய அரசு உரிமையற்று போவது வரை செல்லும் குழப்பகரமான நிலைமை தோன்றுவதற்குள்ள வாய்ப்பையும் நாம் சமகால சர்வதேச உதாரணங்களின் மூலம் புரிந்துகொண்டுள்ளோம். அதனால் எந்தவொரு நாட்டினதும் இருப்பு, தேசிய பாதுகாப்பு பற்றி நாம் கொண்டுள்ள கரிசனையின் அளவிலேயே தங்கியுள்ளது. அதனால் எமது ஆட்சியின் கீழ் ஜனநாயக மக்கள் வாழ்வையும் தேசிய பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்கு அவசியமான நவீன வழிமுறைகளை பின்பற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
2. சினேகபூர்வ மற்றும் பிரியாத வெளிநாட்டுக் கொள்கை
இலங்கையின் அபிமானத்தை உலகின் முன் தலைநிமிர்ந்து நிற்கச்செய்வதே, எமது வெளிநாட்டுக் கொள்கையின் அடிப்படையாகும். நாட்டின் இறைமை மற்றும் சுயாதீனத்தன்மையை எவ்வித நிபந்தனைகளுக்கு மத்தியிலும் காட்டிக்கொடுக்காத, பூமியையோ அல்லது அரச வணிக முயற்சிகளையோ வெளிநாட்டவருக்கு கையளிக்காத மற்றும் நாட்டை பாதிக்கும் வகையில் அமைந்த ஒப்பந்தங்களை கைச்சாத்திடாத கொள்கையை நாம் பாதுகாப்போம். அதற்கு மாறாக உலகின் அனைத்து நாடுகளுடனும் சமமான நண்பர்கள் என்ற ரீதியில் செயற்படும் 'சம நட்பு சர்வதேச கொள்கையை' பின்பற்றுவதற்கு நான் அர்ப்பணிப்புடன் செயற்படுவேன்.
3. தூய்மையான அரச நிர்வாகம்
இன்றைய காலகட்டத்தில் நாட்டு மக்கள் ஒரே குரலில் கேட்கும் பிரதான விடயம், மக்கள் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யும் அரசாட்சியொன்றை உருவாக்குவதே ஆகும். அதன் கீழ் தூர நோக்கைக் கொண்ட கொள்கையொன்றின் கீழ் மக்கள் பிரதிநிதிகளின் மற்றும் அரச ஊழியர்களின் தூய்மையான அர்ப்பணிப்புடன் கூடிய துஷ்பிரயோகம் அற்ற அரசாங்க நிர்வாகத்தை நாம் நிலைநாட்டுவோம்.
4. மக்களுக்கு பொறுப்புக்கூறும் யாப்பு மறுசீரமைப்பு
அரசியல் கட்சிகளின் மற்றும் அதன் தலைவர்களின் தேவைக்கேற்பவும் தனிப்பட்ட அபிலாசைகளுக்காகவும் இலங்கையின் அரசியல் யாப்பை பயன்படுத்திய யுகத்தை நிறைவு செய்து, எமது அரசியல் யாப்பில் செய்யப்பட்டுள்ள குழப்பத்தை நீக்கி மக்களின் இறைமையை முக்கியத்துவப்படுத்தி செயற்படும் புதிய யாப்பு சீர்திருத்தம் ஒன்றை நாம் தாமதிக்காது முன்வைப்போம்.
05. பயனுள்ள பிரஜை - பலனுள்ள மனித வளம்
ஒரு நாட்டின் முன்னேற்றம் அங்கு வாழும் குடிமக்களின் அறிவு, திறமை, மற்றும் செயற்திறனின் அடிப்படையிலேயே தங்கியுள்ளது. ஆனாலும் யுகத்திற்கு யுகம் உலகில் ஏற்படும் புதிய வளர்ச்சிக்கேற்ப பாரிய முன்னேற்றத்துடன் நாமும் அதற்கேற்றால் போல் பயணிக்க வேண்டுமெனில், புத்தாக்கத்தை அடிப்படையாகக் கொண்டு மனித வளம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். அதற்காக சிறந்த அறிவுடன் கூடிய, பயனுள்ள குடிமகனை உருவாக்கும் பொறுப்பை நாம் ஏற்றுக்கொள்கின்றோம்.
06. மக்களை மையமாகக் கொண்ட பொருளாதாரம்
நாம் கட்டியெழுப்பிய, பொது மக்களுக்கு சுமையற்ற, உள்நாட்டு வர்த்தகர்களை பலப்படுத்திய பொருளதாரத்தை சீர்குலைத்த முழு பொறுப்பையும் தற்போதைய அரசாங்கமே ஏற்கவேண்டும். வேகமாக வேலை செய்யும் நாடே உள்நாட்டு வர்த்தகர்களை ஊக்குவிப்பதற்கு தேவைப்படுகின்றது. அதற்கான உரிய இலக்குடன் கூடிய அபிவிருத்தி திட்டங்கள் அரசாங்கத்திடம் இருக்க வேண்டும். அந்த வேலைத்திட்டங்களை நாம் தயாரித்து முடித்துள்ளோம். எனினும் அதற்கு முதலில் உள்நாட்டு வர்த்தகர்கள் எதிர்நோக்கும் நெருக்கடியிலிருந்து அவர்களை மீட்டெடுக்க வேண்டும். இதற்காக அவர்களுக்கு தேவையான சகல வசதிகளையும் முதல் ஆண்டுகளில் வழங்கப்படும். சகல பிரipஜகளுக்கும் நிலையான பொருளாதார ஸ்திரதன்மையும் முன்னேறுவதற்கு சமமான வாய்ப்புக்களும் கௌரவமாக வாழக்கூடிய உரிமையை பெற்றுக்கொடுப்பதும் எமது, மக்களை மையமாக கொண்ட பொருளாதார திட்டத்தின் நோக்கமாகும். அதற்கான துரித வாழ்வாதார வேலைத்திட்டங்களுக்கு மேலதிகமாக செல்வந்தர்களை விடவும் பொது மக்களை மேம்படுத்துவதே எமது நோக்கமாகும்.
07. தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட சமூகம்
நவீன தொழில்நுட்பம் மற்றும் பூகோள போக்குகளை இணைத்துக்கொள்ளும் இளைஞர்களின் எண்ணங்களுக்கு இடமளிக்கும், மேலும் புத்தாக்கத்திற்கு முதலிடம் வழங்கும் அபிவிருத்தியின் புதிய பரிமாணங்கள் வரை செல்லக்கூடிய தொழில்நுட்பவியல் திட்டமொன்று இன்று நாட்டுக்கு அவசியமாக உள்ளது. நாம் அபிவிருத்தியின் உயர் நிலையை நெருங்க வேண்டுமெனில், நவீன தொழில்நுட்ப அறிவு மற்றும் கையாளுதலை தாமதமின்றி கையகப்படுத்துவது அவசியமாகும். எமது பிரதான அவதானிப்பை செலுத்தியிருப்பது, அறிவு மற்றும் திறமையினால் பூரணப்பட்ட எதிர்கால சந்ததியினரை உருவாக்குவதிலேயே ஆகும்.
08. இயற்கை வள அபிவிருத்தி
எமது நாடு உயர்வான அபிவிருத்தி இலக்கை நோக்கிச் செல்வதற்கான அவதானத்தை செலுத்த வேண்டிய பிரதான துறையாக, எமது இயற்கை வளங்களை பயனுள்ள வகையில் பயன்படுத்துவதாகும். நாட்டின் சிறிய பகுதி வரையறை இன்றி பயன்படுத்தப்படுவதோடு, பாரிய பகுதியொன்று எவ்வித பயன்பாடும் இல்லாமல் இருக்கின்றது. அதனால் வசதிகள் மற்றும் பொருளாதார வாய்ப்புகளை நாடு பூராகவும் வியாபிக்கச் செய்து, நாட்டின் எந்தவொரு இடத்தையும் நவீன மானிட வாழ்வுக்கு உகந்த இடமாக மாற்றுவதும் எமக்கு வழங்கப்பட்டுள்ள பாரிய சவாலாகும். அந்த சவாலை ஏற்றுக்கொள்ள நாங்கள் தயார்.
09. பேண்தகு சூழல் மேலாண்மை
மரங்கள், நீர்நிலைகள் மற்றும் மிருகங்களை முதன்மையாக்கொண்ட சூழல், எமது சுவாசத்துடனேயே இணைந்துள்ளது. அதனால் எதிர்கால சந்ததியினருக்காக எமது சூழலை பேண்தகைமையுடன் பாதுகாக்க வேண்டும். புதிதாகும் வன அழிப்புக்கு மத்தியில் அனைத்து காடுகளையும் பாதுகாக்க நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். காலங்கடந்த சட்டங்களை மாற்றியமைத்து, அனைத்து சூழல் துஷ்பிரயோகங்களையும் நிறைவு செய்வதற்கு அவசியமான சட்ட வரையறைகள் உருவாக்கப்பட வேண்டும். அனைத்து ஆறுகள், குளங்கள், கால்வாய்கள் சுத்தப்படுத்தும் வேலைத்திட்டத்துடன் பொதுமக்களுக்கு குடிநீரை பெற்றுக்கொள்வதற்கான உரிமையையும் பாதுகாப்பது எமது பொறுப்பாகும்.
சுபீட்சமான தேசத்தை நோக்கி இலகுவாகப் பயணிப்பதற்கு தடையாக உள்ள, அரச நிர்வாகம் செயலிழந்துள்ள, காலாவதியான சட்ட திட்டங்கள், நிறுவன மற்றும் நிர்வாக யாப்பு போன்ற அனைத்தையும் மறுபரிசீலனைக்கு உட்படுத்தி, அவசியமான சீர்திருத்த ஆலோசனைகளை முன்வைப்பதற்காக (சட்ட மறுசீரமைப்பு சபை) ஒன்று உருவாக்கப்படும்.
10. சட்டத்தை மதிக்கக்கூடிய, ஒழுக்கநெறியுடைய, மற்றும் குணநலங்கொண்ட சமுதாயம்
சமூகத்துடன் நியாயமாக நடந்துகொள்ளும், சட்டத்தின் ஆட்சியை மதிக்கும் குடிமகனை உருவாக்கி, சட்ட ஒழுங்குகளை பின்பற்றும் நாட்டை மற்றும் பேண்தகைமை கொண்ட சமூகத்தை கட்டியெழுப்புவது எமது எதிர்பார்ப்பும் இலக்குமாகும். அந்த முயற்சியில் ஊனமுற்றவர்கள், விசேட திறமைகளை உடையவர்கள் மற்றும் இளைஞர் யுவதிகளுக்கும் பிரதான சமூக பொருளாதார பாதையை விட்டும் தனிமைப்பட இடமளிக்கப்படமாட்டாது. அவர்களுக்கும் பெருமையுடன் உயர் நிலையை அடைய, தமது வாழ்க்கையை முன்னேற்றகரமானதாக மாற்றிக்கொள்ள அவசியமான வசதிகளுடன் கூடிய சூழலொன்று உருவாக்கப்படும்.
1948 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி நாடு சதந்திரம் அடைந்த பின்னர் நாட்டின் 8 ஆவது ஜனாதிபதியாக கடந்த நவம்பர் மாதம் 16ஆம் திகதி தெரிவுசெய்யப்பட்ட அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது ஜனாதிபதி தேதர்தல் வாக்குறுதிக்கு அமைய நாட்டை கட்டி எழுப்புவதற்கு தற்போது நடவடிக்கை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)

