பணிப்பாளர் சபை உறுப்பினராக புரவலர் ஹாசிம் உமர் நியமனம்

Rihmy Hakeem
By -
0


(Ashraff.A.Samad)

பிரதமரும், புத்தசான கலாச்சார மற்றும் மத அலுவல்கள் அமைச்சருமான மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களின்  தலைமையின் கீழ்  டவர் மண்டப அரங்க நிதித்தாபணம் இயங்குகிறது. இந் நிதித்தாபணத்தின் பணிப்பாளர் நாயகமாக டக்லஸ் சிறிவர்த்தனவும் பணிப்பாளர் சபை உறுப்பினராக   புரவலர் ஹாசிம் உமர் அவர்களும் நியமனம் பெற்றுள்ளனர்.

பிரதமர் மஹிந்த ராஜக்க்ஷ அவர்கள் ஜனாதிபதியாக இருந்த கால கட்டத்தில் சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினராகவும், கப்பல் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினராகவும். நெடுஞ்சாலைகள் அமைச்சின் பொதுசன தொடர்பு அதிகாரியாகவும் ,பெற்றோலியம், பெற்றோலிய வளத்துறை அமைச்சின் இணைச் செயலாளராகவும் பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)