இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவினர் இன்று (11) ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து புவிசார் அரசியல் சூழ்நிலை சமூக பொருளாதார நிலைமை போன்றவை தொடர்பில் கலந்துரையாடினர்.
இதேவேளை இலங்கைக்கான நெதர்லாந்துத் தூதுவர் டன்ஜா கொங்ரிஜிப் இன்று (11) ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், ரவூப் ஹக்கீம் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து கலந்துரையமை குறிப்பிடத்தக்கது.