ஹம்பாந்தோட்டை - சூரியவெவ மஹிந்த ராஜபக்ச அரங்கில் நேற்றைய தினம் நடைபெற்ற இலங்கை - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டியை பார்வையிட வந்த ரசிகர்கள் மீது பாதுகாப்புப் பிரிவினர் தாக்குதல் நடாத்தியமைக்காக ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்பதாக விளையாட்டுத் துறை அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
இரு டிக்கட் கவுண்டர்கள் மாத்திரமே திறக்கப்பட்டுள்ளதால் ஏற்பட்ட தாமதத்தை தொடர்ந்து சில ரசிகர்கள் டிக்கட் இல்லாமல் உள்ளே நுழைய முற்பட்ட வேளை பலரும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
இரு டிக்கட் கவுண்டர்கள் மாத்திரமே திறக்கப்பட்டுள்ளதால் ஏற்பட்ட தாமதத்தை தொடர்ந்து சில ரசிகர்கள் டிக்கட் இல்லாமல் உள்ளே நுழைய முற்பட்ட வேளை பலரும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.