முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் மனைவி இன்று இரண்டாவது தடவையாகவும் குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார். கொழும்பு இசிபதானை மாவத்தையிலுள்ள வீடொன்றிலிருந்து காணி உறுதி மற்றும் ஆவணங்கள் தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் அங்கு அழைக்கப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் முதல் தடவையாக அவர் குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்ததுடன் இன்று மு.ப.10.40 அளவில் மீண்டும் அங்கு வருகை தந்துள்ளார். குறித்த வீட்டில் கைப்பற்றப்பட்ட பல ஆவணங்கள் முன்னாள் அமைச்சர் ரிசாதுடைய மனைவியின் பெயரில் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

