இரண்டு கோழிகளை காப்பாற்ற சென்ற மூவர் பலி

Rihmy Hakeem
By -
0
அவிசாவளை - சீதாவக்க பகுதியில் கைவிடப்பட்ட சுரங்கம் ஒன்றில் விழுந்து மூன்று பேர் உயிரழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சுரங்கத்தில் விழுந்திருந்த இரண்டு கோழிகளை காப்பாற்ற குறித்த மூவரும் முனைந்துள்ளனர்.

இதன்போது நோய்வாய்பட்ட நிலையில் குறித்த மூவரும் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்தில் 17, 27 மற்றும் 25 வயதானவர்களே உயிரிழந்துள்ளனர்.

சடலங்கள் அவிசாவளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

அவிசாவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

AdaDerana.lk 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)