இரவு விடுதியில் மோதல் ; ஒருவர் பலி

Rihmy Hakeem
By -
0
கல்கிஸை பகுதியில் அமைந்துள்ள இரவு விடுதியொன்றில் ஏற்பட்ட மோதலில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று (03) அதிகாலை 04.45 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோதலில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
31 வயதுடைய நபர் ஒருவரே உயிரழந்துள்ளதுடன், சடலம் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Tamilmirror 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)