மீடியா போரத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஊடகவியலாளர்களான பைரூஸ், ஏ.ஆர்.எம். ஜிப்ரி நினைவுப் பேருரை

Rihmy Hakeem
By -
0



ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஏற்பாடு செய்த சிரேஷ்ட ஊடகவியலாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் முன்னாள் பொதுச் செயலாளருமான மர்{ஹம் எப்.எம். பைறூஸ் மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளரும் மீடியா போரத்தின் முன்னாள் பொருளாளருமான மர்ஹூம் ஏ.ஆர்.எம். ஜிப்ரி ஆகியோரின் நினைவுச் சொற்பொழிவு இன்று வெள்ளிக்கிழமை (31.01.2020) மாலை கொழும்பு 10 இலுள்ள தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் போரத்தின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான என். எம். அமீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மர்ஹூம் எப். எம். பைரூஸ் பற்றிய நினைவுரையை டெய்லிமிரர் பத்திரிகையின் ஆலோசக ஆசிரியர் எம். எஸ். எம். ஐயூப் மற்றும் மர்ஹூம் ஏ. ஆர். எம். ஜிப்ரி பற்றிய நினைவுரையை சர்வதேச அறிப்பாளர் பி. எச். அப்துல் ஹமீத் ஆகியோரும் நினைவுப் பேருரைகளையும், முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் விஷேட உரையையும் நிகழ்த்தினார்.

கவியாபிமானி கலைவாதி கலீல் காலஞ்சென்ற இரு ஊடகவியலாளர்கள் பற்றி கவிதை பாடினார்.

அத்துடன் இரு ஊடகவியலாளர்கள் நினைவாக ஊடக குடும்பத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளுக்கு கல்வி புலமைப்பரிசில்களும், வறிய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் இரு சிரேஷ்ட ஊடகவியலாளர்களதும் குடும்பத்தினர் மற்றும் அமைப்பின் அங்கத்தவர்கள், பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான், முன்னாள் எம்.பி டாக்டர் ஏ. ஆர் ஹபீஸ், கல்விமான்கள், புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

மர்ஹூம் ஏ. ஆர். எம். ஜிப்ரி கடந்த  2020.01.19ஆம் திகதியும்  மர்ஹூம் எப். எம். பைரூஸ் கடந்த 2019 ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதியும் காலமானார்கள்.










கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)