ரஞ்சனின் விளக்கமறியல் காலம் நீடிப்பு

Rihmy Hakeem
By -
0
பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நுகேகொடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிபதிகளின் நடவடிக்கைகளில் தலையிட்டமை மற்றும் அச்சுறுத்திய குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இன்று (12) சிறைச்சாலை அதிகாரிகளால் நுகேகொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டார்.

இதன்போது, அவரை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

(adaderana)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)