அடிக்கடி ஏற்படும் ரயில் தாமதங்களை தடுப்பதற்காக துரிதமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்படும் என்று ரயில் சேவைகள் இராஜாங்க அமைச்சர் சி.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதற்கு அமைவாக ஒவ்வொரு வாரத்திலும் செவ்வாய்கிழமைகளில் அனைத்து ரயில் அதிகாரிகளையும் அழைத்து வாரத்தில் இடம்பெற்ற ரயில் தாமதங்கள் தொடர்பான விடயங்கள் கண்டறியப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். போக்குவரத்து சேவைக்கு தேசிய கொள்கை ஒன்றும் வகுக்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.