நுவரெலியாவில் சடலமாக மீட்கப்பட்ட சிசுக்கள் - பொலிஸார் தீவிர விசாரணை

Rihmy Hakeem
By -
0
நுவரெலியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நுவரெலியா நேஸ்பி தோட்ட பகுதியில் உள்ள தேயிலை மலையில் இருந்து இறந்த நிலையில் 2 பெண் சிசுக்களின் சடலங்களை நுவரெலியா பொலிஸார் மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று (18) இடம்பெற்றதாகவும் நுவரெலியா பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

குறித்த தோட்ட தேயிலை மலையில் வீசி எறியப்பட்ட குறித்த சிசுக்கள் தொடர்பில் பொதுமக்களால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய சம்பவ இடத்திற்கு சென்று, சிசுக்களின் சடலங்களை மீட்டெடுத்தனர்.

இதேவேளை, மீட்டெடுத்த சிசுக்கள் தொடர்பில் தீவிர விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும், சிசுக்களின் தாயார் தேடப்பட்டு வருவதாகவும், குறித்த சிசுக்களை கொலை செய்தே வீசி எறியப் பட்டிருக்கலாமென நுவரெலியா பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

சிசுக்களின் சடலங்கள் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, சிசுக்களின் தாயாரை தேடும் நடவடிக்கையினை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

-சதீஸ்குமார்-

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)