புதிய கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு அங்கொட தேசிய தொற்றுநோய் நிறுவனத்தில் சிகிச்சை பெற்று வந்த சீன நாட்டுப்பெண் தற்பொழுது முழுமையாக குணமடைந்திருப்பதாக சகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அணில் யாசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டடில் இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் தற்பொழுது இந்த பெண்ணின் உடலில் கிருமிகள் அகன்றிருப்பதாகவும் கூறனார்.
நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைக்கு அமைவாக இந்த பெண் தற்பொழுது வைத்தியசாலையில் இருந்து வெளியேறக்கூடிய வகையில் குணமடைந்திருப்பதாகவும் அவர் கூறினார்.
தற்பொழுது கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு உள்ளானதாக சந்தேகிக்கப்படும் 16 பேர் வைத்தியசாலையில் இருப்பதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அணில் ஜாசிங்க மேலும் தெரிவித்தார்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)

