ஆசிரியர்கள் அடையாள பணி பகிஷ்கரிப்பில்

Rihmy Hakeem
By -
0
சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட 6 கோரிக்கைகளை முன்வைத்து நாளை (26) ஒருநாள் அடையாள பணிபகிஸ்கரிப்பை முன்னெடுக்க உள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த அந்த சங்கத்தின் பிரதம செயலாளர் மஹிந்த ஜயசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

பல வருடங்களாக நீடிக்கும் சம்பள பிரச்சினைக்கு தீர்வை வழங்க தற்போதைய அரசாங்கமும் நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் குற்றம் சுமத்தினார்.

அதற்கமையவே நாளைய தினம் ஒருநாள் அடையாள பணிபகிஸ்கரிப்பை முன்னெடுக்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன் நாளைய தினம் ஆர்பாட்டம் மற்றும் நடைபவணி ஆகியவற்றையும் முன்னெடுக்க உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதற்கு 30 ஆசிரியர் தொழிற்சங்கங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் மஹிந்த ஜயசிங்க மேலும் தெரிவித்தார்.

(அததெரண)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)