கொழும்புக்கும் பதுளைக்கும் இடையில் விசேட கடுகதி ரயில் சேவை

Rihmy Hakeem
By -
0

கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரையிலும், பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை வரையிலும் நாளாந்தம் இரவு ரயிலுக்கு மேலதிகமாக விசேட ரயில் ஒன்று சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.
ரயில் சேவைகள் இராஜாங்க அமைச்சர் சி.பீ.ரத்நாயக்க தெரிவிக்கையில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரயில் என்ஜின்கள் கடந்த சில தினங்களில் கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரையில் பரீட்சார்த்த சேவையில் ஈடுபடுத்தப்பட்டன.
இது வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. இதனால் கொழும்பு கோட்டைக்கும் பதுளைக்கும் இடையில் இரவு கடுகதி ரயில் சேவைக்காக புதிய ரயில் ஒன்று இணைத்துக்கொள்ளப்படுவதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)