கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான ஈரான் பிரதி சுகாதார அமைச்சர்

Rihmy Hakeem
By -
0
சீனாவில் கடந்த டிசம்பர் இறுதியில் இருந்து பரவி வரும் கொரோனா வைரஸ் தொடர்ந்தும் உயிர்ப் பலி இடம்பெற்று வருகிறது.

சீனா மட்டும் அல்லாது உலக நாடுகளையும் பீதிக்குள்ளாக்கிய கொரானோ வைரஸ் தென்கொரியா, ஜப்பான், ஈரான், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

மேலும் ஈரானில் இதுவரை கொரோனாவுக்கு 15 பேர் உயிரிழந்துள்ளனர். 61 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக அந்நாட்டு சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.


இந்நிலையில் ஈரானின் பிரதி சுகாதார அமைச்சர் ஈராஜ் ஹரிர்ச்சி (Iraj Harirchi) கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதை அடுத்து அந்த நாட்டு அரசு நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளன. அதன்படி அங்குள்ள 14 மாகாணங்களில் பாடசாலைகள், கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்வி மையங்களும் தற்காலிமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

adaderana

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)