சவூதிக்கான இலங்கை தூதுவர் மன்னர் காலித் பல்கலைக்கழக இலங்கை மாணவர்களை சந்தித்தார்

Rihmy Hakeem
By -
0
சவூதி அரேபியாவிற்கான இலங்கை நாட்டு தூதுவர், மன்னர் காலித் பல்கலைக்கழக இலங்கை மாணவர்களை சந்தித்தார்

சவூதி அரேபியா நாட்டிற்கான  இலங்கை நாட்டு தூதுவர், மாதுக்க விக்ரமராச்சி மன்னர் காலித் பல்கலைக்கழக இலங்கை மாணவர்களை 24/02/2020 ஆம் திகதி திங்கட்கிழமை சவூதி அரேபியா நாட்டின் அப்ஹாவில் சந்தித்து கலந்துரையாடினார்.

மேற்படி கலந்துரையாடலில் பல்கலைக்கழக கலாபீடங்கள் மற்றும் மாணவர்கள் தேர்வு செய்து கற்கும் துறைகள் பற்றி விரிவாக பேசப்பட்டபோது தூதுவர் மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.

இச்சந்தர்ப்பத்தில் தூதுவர் மாதுக்க விக்ரமராச்சிக்கும் தூதரக Representative and Translator : எம்.எஸ். ஷாஹுல் ஹமீத் அவர்களுக்கும், இந்நிகழ்வை ஏற்பாடு செய்து தந்த ஏற்பாட்டுக் குழுவுக்கும் பல்கலைக்கழக மாணவர்  ஒன்றியம் சார்பாக நன்றிகளை தெரிவித்துள்ளது.

அஷ்ஷேக் அஹ்ஸன் அஸ்மன் (முஹாஜிரி)
மன்னர் காலித் பல்கலைக்கழகம்
சவூதி அரேபியா.









கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)