கடந்த ஆட்சியின் போது வழங்கப்பட்ட நிவாரணங்கள் நிறுத்தப்பட்டுள்ளன - முஜிபுர் ரஹ்மான்

Rihmy Hakeem
By -
0
எமது அரசாங்கம் ஆட்சியில் இருந்தபோது,  பொருள்களின் விலை அதிகரிப்பை குறைகூறிய, தற்போதைய அரசாங்கத் தரப்பினர், இலவசமாக உணவுப் பொதியை வழங்குவதாக கூறிவிட்டு, எமது ஆட்சியில் வழங்கப்பட்ட போஷாக்கு உணவுப் பொதியையும் நிறுத்திவிட்டனரென, நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்தார்.
கட்சித் தலைமையகமான சிறிகொத்தாவில், இன்று(16) நடைபெற்ற  ஊடகவியலாளர்  சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது  மேலும் கருத்துரைத்த அவர், கடந்த ஆட்சியில் பொருள்களின் விலை அதிகரிக்கின்றபோது, அரசாங்கத்தால் அதனை கட்டுப்படுத்த முடியாதெனக் குறைக் கூறினர். வாழ்க்கைச் செலவு அதிகரித்துவிட்டது என்றும் அதனால் மக்களுக்கு வாழ முடியாதுள்ளது எனவும் பல மேடைகளில் ஆட்சியை  குறைகூறியவர்களின் தற்போதைய நிலையும் அவ்வாறே உள்ளது என்றார். 
அத்துடன், கடந்த ஆட்சியில் மக்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணங்கள் தற்போதைய அரசாங்கத்தில்  நிறுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.  

தமிழ் மிரர் 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)