தேசிய மீனவர் மகா சம்மேளனத்தின் முதலாவது நிறைவேற்றுக்குழு கூட்டம் அதன் புதிய தலைவரான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.
இக் கூட்டம் நேற்று 2020.02.06 கடற்றொழில் நீரியல் வள மூல அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இச் சம்மேளனமானது கடற்றொழில் திணைக்களம் உருவாக்கப்பட்டு ஒரு சில வருடங்களில் ஏற்படுத்தப்பட்ட முக்கிய அமைப்பாகும்.
இக் கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, புதிய அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளராக தமது ஊடகச் செயலாளரான நெல்சன் எதிரிசிங்க நியமிக்கப்பட்டிருப்பதாகவும் அகில இலங்கை மீனவர் மகா சம்மேளனத்தின் மூலம் மீனவர் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கையெடுப்பதாகவும் தெரிவித்தார்.
இவ் வைபவத்தில் உரையாற்றிய சம்மேளனத்தின் பொதுச் செயலாளரகிய நெல்சன் எதிரிசிங்க தனது உரையில், சம்மேளனத்தின் இணை அமைப்புக்களான மாவட்ட மீனவர் சங்கங்களை ஒன்றினைத்து மீனவர் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அமைச்சருக்கும் அமைச்சின் அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டு சென்று முழு மீனவர் சமுகத்திற்கும் சிறந்த சேவைiயாற்றுவதாக தெரிவித்தார்.
இக் கூட்டத்தில் அமைச்சின் செயலளாலரான திருமதி. இந்து இரத்நாயக்க, இராஜங்க அமைச்சின் செயலாளர் ரஞ்சித் தர்மபால, கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பிரசன்ன கினிகே, தேசிய நீர்வாழ் உயிரின அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ஜயந்த வீரசேகர, அவ் அதிகார சபையின் பணிப்பளார் நாயகம் நிமல் சந்திரரத்ன இலங்கை கடல் தொழில் கூடுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிசாந்த இரத்னவீர ஆகியோர் கலந்துகொண்டனர்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)