இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
பிரதமர் மகிந்த ராஜபக்ஷவிற்கு ராஜ்பவனில் ராணுவ வீரர்கள் அணிவகுப்புடன் செங்கம்பள வரவேற்பும் அளிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோதியுடனான சந்திப்பு ஐதராபாத் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது. இந்தியா - இலங்கைக்கிடையே வர்த்தக உறவுகள் பற்றி இரு தலைவர்களும் இதன் போது கலந்துரையாடியுள்ளனர்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் இந்த விஜயம் அமைந்துள்ளது. பிரதமர் பதவிக்கு நியமிக்கப்பட்டதன் பின்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.
இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை பலப்படுத்தும் வகையில் பிரதமரின் இந்த விஜயம் அமைவதாக பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்த விஜயத்தில் பிரதமருடன், அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, ஆறுமுகன் தொண்டமான் உள்ளிட்டவர்களும் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சந்திப்புக்கு முன்னதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இன்று முற்பகல் இடம்பெற்ற இந்த சந்திப்புக்குப்பின்னர் பிரமதர் மஹிந்த ராஜபக்ஷ, இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்து. கலந்துரையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)