மரக்கறி சந்தைக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி!

Rihmy Hakeem
By -
0
இன்றைய தினம் கண்டி மாவட்டத்தின் கலஹா பிரதேசத்திலுள்ள மரக்கறி சந்தைகளுக்கு திடீர் விஜயம் ஒன்றை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷ அவர்கள் மேற்கொண்டு, மரக்கறி விலைகளின் அதிகரிப்புக்கான காரணங்களை வியாபாரிகளிடம் வினவினார்.

இதற்கு, தமது பிரதேச மரக்கறிகள் தம்புள்ளைக்கு அனுப்பப்படுவதே விலை அதிகரிப்பிற்கு முக்கிய காரணம் என்று வியாபாரிகள் பதிலளித்துள்ளனர்.

இது தொடர்பில் உரிய தரப்பினருடன் கலந்துரையாடி விரைவில் தீர்வொன்றைப் பெற்றுத்தருவதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார். அண்மையில் ஜனாதிபதியவர்கள் மரக்கறி விலைகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)