சிவிங்கிப்புலி - சிறுத்தை வித்தியாசம் என்ன?

  Fayasa Fasil
By -
0

சிவிங்கிப்புலிகள் இந்தியாவுக்கு வந்தால்.......

இந்தியாவுக்கு மீண்டும் சிவிங்கிப்புலிகளைக் கொண்டு வர வேண்டும் என்று பத்தாண்டுகளுக்கும் மேலாக முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. சிவிங்கிப்புலிகளை திறந்து விடுவதற்கு உரியதாக 3 பகுதிகளை இந்திய வனவிலங்கு டிரஸ்ட் மற்றும் இந்திய வனவிலங்கு இன்ஸ்டிடியூட் 2010ல் அடையாளம் கண்டன.
இந்தியாவுக்கு திரும்பவும் வருகிறது சிறுத்தைகள்: சிறுத்தைகளை வளர்த்து வேட்டைக்குப் பயன்படுத்திய கோலாப்பூர்வாசிகள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
மத்தியப் பிரதேசத்தில் குனோ பாலபூர் மற்றும் நவ்ரோடேஹி வனவிலங்கு சரணாலயம், ராஜஸ்தானில் ஷாஹ்கர் ஆகிய இடங்களில் வனத்தில் சிவிங்கிப்புலிகளை விடலாம் என தெரிவிக்கப்பட்டது. இந்த அமைப்புகள் ராஜஸ்தான், குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், சண்டீகர் மாநிலங்களில் ஆய்வு மேற்கொண்டு இந்தப் பரிந்துரையை அளித்தன.
சிவிங்கிப்புலிகளுக்கான உணவு கிடைக்கும் வாய்ப்பு, அந்தப் பகுதிவாழ் மக்களின் கருத்துகள், தொலையுணர் கருவிகள் மூலம் சேகரித்த தகவல்களின் அடிப்படையில் அறிக்கை தயாரிக்கப்பட்டது. இந்தியாவுக்கு வெட்டுப்புலிகளைக் கொண்டு வருவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துவிட்டது என்றாலும், சிவிங்கிப்புலிகள் உயிர் வாழ்வதற்கு ஏற்ற சுற்றுச்சூழலும், வாழ்விட சூழலும் இருக்கின்றனவா என்தற்கான உறுதிபடுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் இல்லை.
இந்தியாவுக்கு சிவிங்கிப்புலிகளைக் கொண்டு வருவதற்கான முடிவு குறித்து சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர் லட்சுமிகாந்த் தேஷ்பாண்டே கூறியுள்ளார். ``இந்தியாவில் சிவிங்கிப்புலிகள் வாழ்ந்துள்ளன. உணவுக்காக வேட்டையாடும் போது சிவிங்கிப்புலிகளுக்குள் போட்டி ஏற்படக் கூடாது. எனவே, சிவிங்கிப்புலிகள் வாழ்வதற்கான பகுதியைத் தேர்வு செய்யும்போது, ஓர் ஆய்வு நடத்தப்பட வேண்டும்'' என்று அவர் கூறியுள்ளார்.
இந்தியாவுக்கு திரும்பவும் வருகிறது சிறுத்தைகள்: சிறுத்தைகளை வளர்த்து வேட்டைக்குப் பயன்படுத்திய கோலாப்பூர்வாசிகள்படத்தின் காப்புரிமைLEELAVATI JADHAV
``ஒன்று அல்லது இரண்டு இடங்களுக்கு மட்டும் நாம் சிவிங்கிப்புலிகளைக் கொண்டு வந்தால், ஆப்பிரிக்காவில் உள்ளதைப் போன்ற இயற்கை வனவிலங்கு காப்பகமாக அது மாறிவிடும். விலங்குகள் பாதுகாப்பில் தவறான முன்னுதாரணத்தை அது ஏற்படுத்திவிடும். பகட்டு அறிவிப்புக்காக இந்தியாவுக்கு சிவிங்கிப்புலிகளைக் கொண்டு வருவது தவறான உதாரணமாகிவிடும். அவற்றின் இனப்பெருக்கத்திற்கும் நாம் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும்'' என்கிறார் அவர்.
சிவிங்கிப்புலி - சிறுத்தை வித்தியாசம்என்ன?
இரு வகை புலிகளின் உடலில் உள்ள புள்ளிகள் பலருக்கும் பல சமயங்களில் குழப்பத்தை ஏற்படுத்தும். ஆனால் இவை இரண்டுக்கும் இடையில் எளிதாக வித்தியாசத்தைக் காண முடியும். சிவிங்கிப்புலிகளுக்கு உடலில் கறுப்புப் புள்ளிகள் இருக்கும். சிறுத்தைகளுக்கு புள்ளிகள் ரோஜா நிறம் கலந்து இருக்கும். சிவிங்கிப்புலிகளுக்கு முகத்தில் கறுப்புக் கோடு தெரியும். சிறுத்தைகளுக்கு அது இருக்காது.
இந்தியாவுக்கு திரும்பவும் வருகிறது சிறுத்தைகள்: சிறுத்தைகளை வளர்த்து வேட்டைக்குப் பயன்படுத்திய கோலாப்பூர்வாசிகள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
திறந்த புல்வெளிகளில் சிவிங்கிப்புலிகள் வாழ விரும்பும். ஆனால் சிறுத்தைகள் அடர்ந்த வனப்பகுதிகள் மற்றும் மரங்களைத் தான் விரும்பும். அவை மரங்களின் மீது தான் அதிக பொழுதைக் கழிக்கும். ஆண் சிவிங்கிப்புலி சுமார் 54 கிலோவும், பெண் சிவிங்கிப்புலி சுமார் 43 கிலோவும் இருக்கும். மாறாக, ஆண் சிறுத்தை 60 முதல் 70 கிலோ வரையும், பெண் சிறுத்தை 30 முதல் 40 கிலோ வரையும் எடை இருக்கும்.
bbc tamil 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)