அம்பாறை மாவட்டத்தில் சிறுபான்மை கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும்

Rihmy Hakeem
By -
0
அம்பாரை மாவட்டத்தில் சிறுபான்மை கட்சிகள் ஒன்றிணைந்து பாராளுமன்ற தேர்தலை அணுகவேண்டும் என சமூகத்திற்கும் அரசியல் கட்சிகளுக்கும் அம்பாரை மாவட்ட கரையோர பிராந்திய ஜனநாயக இடது சாரி முன்னனியின் இணைப்பாளரும், நீர் வழங்கள், வடிகாலமைப்பு, வசதிகள் இராஜாங்க அமைச்சின் பொத்துவில் தொகுதி இணைப்பாளருமான  S.A.ஜப்பார் வேண்டுகோள் விடுத்தார்.

தொடந்து கருத்து கூறுகையில் நீர் வழங்கும் வசதிகள் இராஜாங்க அமைச்சர் வாசுதேவநாணயக்கார அவர்களின் ஊடக மகாநாட்டில் இந்த கருத்தை முன்மொழிந்ததுடன் இவ் சிறுபாண்மையர் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு மூலம் அம்பாரை மாவட்டத்தில் ஐந்து பாராளுமன்ற சிறப்பு உரிமை அதிகாரத்தை பெற்றுக் கொள்ள முடியும் என்பதையும் வலியுறுத்தினார்.

இதற்கான வலுவமைப்பின் தேவையாக கூட்டமைப்பின் தேவையை கவனத்தில் கொண்டு செயற்படுவதன் இவ் மாவட்டத்தில் மக்களுக்குக்கான நிலையான அபிவிருத்தியையும் மக்கள் மயமாக்க முடியும் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

அதே சமயம் உழைப்பாளர் மக்களின் அரசியல் பொருளாதாரம் பாதுகாப்பு உரிமையை முதலாளித்துவ அரசியல் அதிகாரத்தில் இருந்து மீட்டு எடுக்கும் தமது ஜனநாயக இடதுசாரி முன்னனியின் அரசியல் கட்டமைப்பை கரையோர மாவட்டத்தில் கட்டி எழுப்பும் தேவையை விளக்கியதுடன் சாந்தி,சமாதானம்,சகவாழ்வு,மதம்,மார்க்கம்,மொழி,கலை,கலச்சாரம்,ஐக்கிய உறவுக்கு உயிர் கொடுத்து எமது தாய் நாட்டின் பொருளாதாரம் இறையான்மை பாதுகாப்பை பலப் படுத்தி ஒன்று பட்ட தேசிய கொள்கை மூலம் நிலையான அரசியல் தீர்வை பெற்றுக் கொள்ள வேண்டிய தேவை உள்ளதையும் அதற்கான தேவை சமூகத்திற்கும் முஸ்லிம் கூட்டமைப்புக்கும் உள்ளன என்பதையும் வலியுறுத்தினார்.

அம்பாரை மாவட்டத்தில் இளைஞர்கள் தலைமைத்துவத்துடனும் மக்களின் ஆதரவுடனும் 10.11.12.02.2020 நாட்களில் கிழக்கு மாகாண இணைப்பாளர் M.F.A.L.மரைக்கார் தலைமையுடன் பானமை,பசறிச்சேனை,பாகோமாரி,அக்கரைப்பற்று,அட்டாளச்சேனை,நிந்தவூர்,சம்மாந்துறை,சாய்ந்த மருது,கல்முனை,மருதமுனை DLF கிளைகளை திறந்து வைத்ததுடன் அம்பாரை மாவட்ட கரையோர பிராந்திய நீர்வழங்கள் வசதிகள் அமைச்சின் இணைப்பாளர் பணிமனையையும் திறந்து வைத்தார்.

ஜனநாயக இடதுசாரி முன்னனியின் கோறிக்கையை ஏற்றுக் கொண்டு ஒரு தெளிவான கூட்டமைப்பை ஏற்படுத்துவதன் வங்கோராத்து அரசியல் வியாபார கொள்கையை அகற்றிவிட்டு மக்களுக்குகான அரசியல் கொள்கையை மக்கள் மயமாக்கும் அரசியல் கொள்கையை முன் எடுப்பதற்கு எமது கட்சியின் கதவு என்றும் திறந்து இருக்கும் என்பதை எடுத்துறைத்துடன் இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினரும் அக் கட்சியின் உப தலைவருமான ஹரிஸ் அவர்களால் விடுக்கப் பட்டு இருந்த அறிக்கையை ஞாபகமூட்டியதுடன் ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்று விழித்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பிர்தவ்ஸ் - கல்முனை 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)