ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத்தொடர் இன்று (24) ஆரம்பமாகவுள்ளது.
ஜெனீவாவில் இடம்பெறும் இந்தக் கூட்டத்தொடர் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
எதிர்வரும் 27 ஆம் திகதி இலங்கை குறித்த விவாதம் நடைபெறவுள்ளது.
அத்துடன், வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன மனித உரிமைகள் பேரவையில் எதிர்வரும் 26 ஆம் திகதி உரை நிகழ்த்தவுள்ளார்.
எதிர்வரும் புதன்கிழமை நடைபெறும் பேரவையின் உயர்நிலை அமர்வில் உரையாற்றவுள்ள அமைச்சர் தினேஷ் குணவர்தன அரசாங்கத்தின் தீர்மானத்தை உறுப்பு நாடுகளுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளார்.
தமிழ் மிரர்

