புகையிரத e Ticket சேவை ஆரம்பிக்கப்பட்டது

Rihmy Hakeem
By -
0
இலங்கை அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு, ரயில் போக்குவரத்துக்கான ஆசனங்களை இணையம் மூலம் ஒதுக்கீடு செய்வதற்கான திட்டம்,  அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில், கொழும்பு- கோட்டை ரயில் நிலையத்தில், இன்று (19) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதுவரைக் காலமும் ஓய்வு பெற்றோருக்கான புகையிரத சீட்டுகளை ஒதுக்கீடு செய்யும் செயற்பாடுகள்,   அவர்கள் வசிக்கும் பிரதேசத்தின் கிராம சேவகரின்  உறுதிப்படுத்தலை பெற்றுக்கொண்டு,  புகையிரத திணைக்களம் டிக்கெட்டுகளை விநியோகித்து வந்தது.
இதனால்,  ஓய்வூதியம் பெறுவோர் எதிர்நோக்கிவந்த நெருக்கடிகளை கருத்திற்கொண்டு, ரயில்வே திணைக்களம் குறித்த திட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளது.

Tamilmirror 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)