பொதுத்தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பதை தீர்மானிக்க பிரதமரை சந்திக்கும் SLFP

Rihmy Hakeem
By -
0
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைத்து எதிர்வரும் பொதுத்தேர்தலில்  களமிறங்குவதுத் தொடர்பில், பொதுஜன பெரமுனவின் தலைவர் பிரதமர்  மஹிந்த ராஜபக்ஷவுடன் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி கலந்துரையாடவுள்ளது.
சு.கவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் செவ்வாய்க்கிழமை பிரதமரை சந்தித்து இதுத் தொடர்பில் கலந்துரையாடவுள்ளனர்.
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் இரு கட்சிகளும் செய்துகொண்ட புரிந்துணர்வு உடன்படிக்கைத் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக சு.கவின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
மேலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர், தனியாகவா அல்லது கூட்டணி அமைத்தா எதிர்வரும் பொதுத்தேர்தலில் சுதந்திரக் கட்சி களமிறங்கும் என்பது இதன்பின்னரே தீர்மானிக்கப்படுமெனவும் தெரிவித்துள்ளார்.

TamilMirror

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)