இதனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தற்பொழுது உறுதி செய்துள்ளார்.
11 ஆவது இலங்கை கொரோனா வைரஸ் தொற்று நோயாளி உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். இந்த நோயாளி 45 வயதான ஆண் நபர். இதற்கு முன்னர் நோய் உறுதி செய்யப்பட்ட ஜேர்மனியில் சுற்றுலாப்பயணத்தை மேற்கொண்டு வந்திருந்த நபருடன் இந்த நோயாளி தொடர்புபட்டிருந்த நபராவார். தற்பொழுது இவர் IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என்றும் டொக்டர் ஜாசிங்க மேலும் தெரிவித்தார்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)

