உலக நுகர்வோர் உரிமைகள் தினம் 15.03.2020

Rihmy Hakeem
By -
0


சர்வதேச நுகர்வோர் அமைப்பு  என்ற ஒரு அமைப்பு 1960 ஏப்ரல் மாதம் 1ஆம் நாள்  தொடங்கப்பட்டது. இதில் தற்போது  120 நாடுகளைச் சேர்ந்த 250 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள்  வளரும் நாடுகளை சேர்ந்தவர்கள். இதன் தலைமையகம் இங்கிலாந்தின் லண்டனில் உள்ளது. 1962ஆம் ஆண்டு  அப்போதைய அமெரிக்க அதிபர் ஜான் கென்னடி, நுகர்வோரின் முக்கியத்துவம் குறித்து முதன்முதலில் வலியுறுத்தினார்.

இதையடுத்து 1983 ஆம் ஆண்டு  மார்ச் மாதம்  15ஆம் நாள்  இந்த தினம் உருவாக்கப்பட்டது. வியாபாரி விற்கும் ஒரு பொருளை பயன்படுத்துபவரே நுகர்வோர். சந்தையின் முக்கிய எஜமானர் நுகர்வோர் தான். இவர்கள் இல்லையெனில் சந்தை இல்லை. தாங்கள் கொடுக்கும் பணத்திற்கு  ஏற்ப சில பொருட்களின் தரம் இருப்பதில்லை என நுகர்வோர் குற்றம் சாட்டுகின்றனர்.
பொருட்களை வாங்கும் போது குறிப்பிட்ட தர நிர்ணய ஆணையங்களின் தர முத்திரைகள் உள்ளனவா என்பதை சோதிப்பது பார்ப்பது அவசியம். மேலும் அதில்,

விலை, உற்பத்தியாளர் முகவரி, காலாவதி தேதி, மற்றும் விற்பனை ரசீது போன்றவற்றை சரிபார்த்து வாங்க வேண்டும்.

நுகர்வோரின் உரிமைகள்:

நுகர்வோர் உரிமைகள் குறித்து  விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆண்டுதோறும்  மார்ச் 15ல் உலக நுகர்வோர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

'நிலையான நுகர்வோர்' என்பது இந்தாண்டு மையக்கருத்து. சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படாத மற்றும் பருவநிலையை பாதிக்காத வகையில் நிறுவனங்களின் தயாரிப்புகள் மற்றும் நுகர்வோரின் பயன்பாடு இருக்க வேண்டும் என இந்தாண்டு மையக்கருத்து விளக்குகிறது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)