சில பகுதிகளில் நண்பகல் 12 மணி முதல் ஊடரங்கு சட்டம்!

Rihmy Hakeem
By -
0
புத்தளம், சிலாபம், நீர்க்கொழும்பு பொலிஸ் பிரிவின் கொச்சிக்கடை, ஜா-எல மற்றும் வத்தளை பொலிஸ் பிரிவு பகுதிகளில் அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று (20) காலை 9 மணி முதல் தளர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி, புத்தளம், கறுவலகஸ்வெவ, வணாதுவில்லுவ, பள்ளம, நவகத்தேகம, முந்தல், உடப்பு, சாலியவெவ, நுரைச்சோலை, சிலாபம், வென்னப்புவ, மாரவில, மாதம்பே, கொஸ்வத்தை, தங்கொடுவ, ஆராச்சிகட்டுவ மற்றும் கொச்சிக்கடை பொலிஸ் பிரிவிற்கு அமுல்ப்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் தற்காலிகமாக தளர்த்தப்பட்டுள்ளது.

மேலும் குறித்த பகுதிகளுக்கு மீண்டும் நண்பகல் 12 முதல் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

(adaderana)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)