இத்தாலி, தென்கொரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் இருந்து இலங்கை வரும் அனைத்து பயணிகளையும் 14 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
இன்று சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடான சந்திப்பின் போதே சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கையர்கள், வெளிநாட்டவர்கள் இந்த செயற்பாட்டுக்கு உட்படுத்தப்படுவார்கள், இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை வரும் கப்பல்களின் பயணிகளுக்கு இலங்கைக்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)

