ஒரு தென்கிழக்கு அலகினை இஸ்லாமியா்கள் பெற்றுக் கொள்ள வேண்டும் - பேராசிரியர் பத்மநாதன்

Rihmy Hakeem
By -
0
(அஸ்ரப். ஏ. சமத்)

யாழ் பல்கலைக்கழக முன்னாள் வேந்தரும் பேராசிரியருமான எஸ் பத்மநாதன் அண்மையில் இடம்பெற்ற "சம்மாந்துறையிலும் வாழ்வியலும் வரலாறும்" 1000 பக்க நூல் வெளியீட்டு விழாவில் ஆற்றிய தனது உரையில் கிழக்கில் வாழும் முஸ்லீம்கள் தமிழா்களோடு அந்நியோன்னியமாக  வாழ்ந்த வரலாறு உள்ளது. எதிா்காலத்தில் தமிழரும் இஸ்லாமிய தலைவா்கள் மனம் விட்டு பேசி  இரு  சமுகங்களும்  நமது இருப்பை உறுதிப்படுத்திக் கொள்ளல்  வேண்டும் இல்லாவிட்டால் எதிா்காலத்தில் நமது சமுகத்திற்கான  இருப்புக்கள் கேள்விக்குறியாகிவிடும்.    வட கிழக்கில்  முஸ்லிம் குடியிருப்புக்களை ஒன்றினைத்து  ஒரு தென்கிழக்கு அலகினை இஸ்லாமியா்கள்  பெற்றுக் கொள்ள வேண்டும் அதுவே அவா்களுக்கு எதிா்காலத்தில் நிம்மதியாக அவா்களது சமுகத்திற்கு அவா்கள் செய்யும் கைங்கரியமாகும். . இல்லாவிட்டால் எதிா்காலத்தில் நமது இருப்புக்கள் அடையாளங்கள் புவியல் மொழி, பொருளாதார ரீதியில் கேள்விக்குரியாகி விடும்.   .கடந்த உயிா்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னா் இஸ்லாமியா்கள் கிழக்கில் காப்பாற்றப்பட்டுள்ளாா்கள்.  நான் அன்மையில் தென்கிழக்கு விஜயம் செய்தபோது அங்கு சிறந்த புவியில் ரீதியாக தொடா்புகள்  சிறப்பாக உள்ளன.

கிழக்கில் வடக்கு மட்டுமல்ல பொலநருவை  அநுராதபுரத்தில் கூட சம்மாந்துரை வரலாற்று நுால் போன்று இதுவரை எழுதப்பட்டதாக நான் அறியவில்லை. இளம் பட்டதாரிகள் தென் கிழக்கில் உருவாகி வருகின்றனா். அவா்களை நாம் பயண்படுத்தி  இவ்வாறு பல வரலாற்றுப் பதிவுகளை நிலை நிறுத்திக் கொள்ளல் வேண்டும்   தென்கிழக்கு பல்கலைக்கழக  பேராசிரியா்  ரமீஸ் அப்துல்லா தலைமையிலான   மற்றும் அவா் புததக குழு  பலா் ஒன்று சோ்ந்து பிரித்த்தாணியா் தொட்டு இன்று வரை சம்மாந்துறை  வரலாற்று நுால் தொகுக்கப்பட்டுள்ளது.  இது வரவேற்கத்தக்கது.   என பேராசிரியா் பத்மநாதன்  அஙகு உரையாற்றினாா்

மேற்கண்டவாறு அவா் சம்மாந்துறை வரலாறு நுால் வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தாா்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)