கொவிட்-19 தொற்று உள்ள நாடுகளிலிருந்து வருகை தரும் பயணிகளுக்கு விசேட மத்திய நிலையங்கள்

Rihmy Hakeem
By -
0
கொவிட்-19 நோய் பரவியுள்ள நாடுகளிலிருந்து இலங்கை வரும் பயணிகளை தனிமைப்படுத்தி கண்காணிப்பதற்காக மேலும் இரண்டு மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவையின் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் மற்றும் கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையம் ஆகியன இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த மத்திய நிலையங்களில் இத்தாலி, தென்கொரியா, ஈரான் ஆகிய நாடுகளிலிருந்து வருகைதரும் பயணிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்படவுள்ளனர்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)