கொரோனா (கொவிட்-19 ) வைரஸ் - இத்தாலியில் உள்ள ஏனைய இலங்கையர்களுக்கு பாதிப்பு இல்லை

Rihmy Hakeem
By -
0
கொரோனா (கொவிட்-19 ) வைரஸ் வேகமாக பரவிவருவதன் காரணமாக இத்தாலியில் மூடப்படவுள்ள லொம்பாட் வலயம் மற்றும் 11 பிரதேசங்களில்; உள்ள இலங்கையர் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு இருப்பதாக இத்தாலியின் மிலானோ நகரில் உள்ள இலங்கை கொன்சல் ஜெனரல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தற்பொழுது இத்தாலியில் லொம்பாட் வலயம் மற்றும் 11 பிரதேசங்களில் வாழும் 16 மில்லியன் மக்களை தனிமைப்படுத்துவதற்கு இத்தாலி அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதுவரையில் இத்தாலியில் வாழும் இலங்கை பெண் ஒருவர் மாத்திரம் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளார். ஏனையோருக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸின் காரணமாக இத்தாலியில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 233 ஆக அதிகரித்துள்ளது. இந் நாட்டில் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்ககை 5 ஆயிரத்து 883 ஆகும். இதேவேளை தென்கொரியாவில் உள்ள இலங்கையர் எவருக்கும் கொரோனா வைரஸினால் எந்தவித பாதிப்பும் இல்லை என அந்நாட்டிலுள்ள இலங்கை தூதரக அலுவலகம் தெரிவித்துள்ளது.
அந்நாட்டில் வாழும் இலங்கையர்களுக்கு வசதிகளை செய்வதற்காக தூதரக அலுவலகம் 24 மணித்தியாலமும் செயற்பட்டு வருவதாக கொரியாவில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)