கட்டுநாயக்கவில் இறங்கிய 203 விமான பயணிகள் தனிமைப்படுத்தும் முகாமிற்கு அனுப்பிவைப்பு

Rihmy Hakeem
By -
0

கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று அதிகாலை வந்தடைந்த 203 பயணிகள், 15 பஸ் வண்டிகள் மூலம் மட்டக்களப்பு, கந்தக்காடு, தனிமைப்படுத்தும் மத்திய நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் தனிமைப்படுத்தும் வேலைத்திட்டம் தோல்வி அடையுமாயின் இத்தாலி முகம் கொடுக்கும் நிலை இலங்கையிலும் ஏற்படலாம் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு உயர்ந்தபட்ச ஒத்துழைப்பை வழங்குமாறு வைத்தியர்கள் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் கந்தக்காடு மத்திய நிலையத்தில் இருந்த ஒருவரும், சோமாவதி பிரதேசத்திற்கு விஜயம் செய்த ஒருவரும் அங்கொடை IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்த நோய்த் தொற்றுக்கு உள்ளானதாக சந்தேகிக்கப்படும் 19 பேர் தற்சமயம் இனம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)