கொரோனா வைரஸில் இருந்து நாட்டு மக்களை பாதுகாக்க சுதேசிய ஆயர்வேத முறை

Rihmy Hakeem
By -
0

கொரோனா வைரஸில் இருந்து நாட்டு மக்களை பதுகாப்பதற்காக சுதேசிய ஆயர்வேத முறையை பயன்படுத்துவதற்கு ஆயர்வேத மருந்தக கூட்டுத்தாபனம் வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளது.
இதற்கு தேவையான இஞ்சியை சரியான வகையில் உலர்த்துவதற்கான தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதற்கு தயாராகி வருகின்றது.
கொரோனா வைரசுக்கு ஆயர்வேத சுதேசிய மருந்தக கூட்டுத்தாபனம் ரத்த கல்க்கய, புத்தராய கல்க்கய, நவரத்ன கல்க்கய, சீதாராமகுலி ஆகியவற்றை பெருமளவில் சந்தைக்கு விநியோகித்திருப்பதாக திருமதி. சாகல அபேவிக்ரம தெரிவித்துள்ளார்.
நாட்டில் உற்பத்தியாளர்களிடம் இருந்து உலர்த்தப்படாத இஞ்சியை கொள்வனவு செய்வதற்கு தயாராகியுள்ளது.  கிலோ இஞ்சி 80.00 ரூபாவிற்கும் 90.00 ரூபாவிற்கும் இடைப்பட்ட விலைக்கு வழங்க விருப்பம் உள்ளோர் அது தொடர்பாக 011 2850229 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அறிவிக்க முடியும். மொத்தமாகவும் கொள்வனவு செய்யப்படவுள்ளது.
மற்றுமொரு நபருக்கு கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ் (கொவிட் - 19) நோய் தாக்கம் இருப்பதாக உறுதி செய்யப்பட்டு தற்பொழுது IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளருடன் தங்கியிருந்த மற்றுமொரு நாருக்கும் இந்த வைரஸ் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் விடுத்துள்ள அறிக்கை பின்வருமாறு:
2020.03.12
செய்தி ஆசிரியர்,
செய்தி பணிப்பாளர்.
ஊடக அறிக்கை
கொரோனா வைரஸ் (கொவிட் - 19) நோய் தாக்கம் இருப்பதாக உறுதி செய்யப்பட்டு தற்பொழுது IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளருடன் தங்கியிருந்த மற்றுமொரு நாருக்கும் இந்த வைரஸ் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

வைரஸ் தாக்கியிருப்பதாக இதுவரையில் உறுதி செய்யப்பட்டுள்ள இந்த நபர் 44 வயதானவர். அத்தோடு இவர் தற்பொழுது ஐனுர் வைத்தியசாலயில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
நாலக்க கலுவேவ,
அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)