மத ஸ்தலங்களில் பிரசங்கத்தை சுருக்கி கொரோனா பற்றிய விழிப்புணர்வை வழங்கவும் - மௌலானா

Rihmy Hakeem
By -
0

மத ஸ்தலங்களில் பிரசங்கத்தை சுருக்கி கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான விழிப்புணர்வை வழங்குமாறு முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா - பொது அமைப்புக்கள் சமூக நிறுவனங்களிடம் கோரிக்கை

தற்போது உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கின்ற கொரோனா வைரஸ் பற்றிய தெளிவினையும் விழிப்பூட்டலையும்  மக்களுக்கு வழங்கி அவர்களது உளவியல் ரீதியான அச்சத்தையும் தாக்கத்தினையும் மட்டுப்படுத்த வேண்டியது நம் அனைவர் மீதும் தலையாய கடமையாகும், அந்த வகையில் மத ஸ்தலங்களில் சமய பிரசங்கங்களை சுருக்கி மக்களை  விழிப்பூட்டுவதற்காக பயன்படுத்துமாறு முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதன்பிரகாரம் சுகாதார வைத்திய அதிகாரியினது வழிகாட்டலில் ,உள்ளூராட்சி மன்றங்களதும், பிரதேச செயலகங்களதும், வைத்தியசாலைகள், பொது அமைப்புக்களின் சம்மேளனம், ஜம்மியத்துல் உலமா , பௌத்த , இந்து, இஸ்லாமிய , கிறிஸ்தவ வழிபாட்டுத்தளங்களின் ஒத்துழைப்புடன் மக்களுக்கு விழிப்பூட்டல் நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசர தேவையாக உள்ளது, இதற்கான முழுமையான ஒத்துழைப்பினை வழங்க எந்நேரமும் தயாராக உள்ளேன்.

அந்த வகையில் நாளை வெள்ளிக்கிழமை முஸ்லிம் பிரதேசங்களில் ஜூம்ஆ பிரசங்க நேரத்தை 15 நிமிடங்கள் சுருக்கி வைத்தியர்கள், துறை சார் முக்கியஸ்த்தர்களை கொண்டு விழிப்புணர்வு உரை ஒன்றினை ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொள்வதுடன், வதந்திகளையும் பொய்யான தகவல்களையும் பரப்பி மக்களை மேலும் அச்சமான சூழலுக்கு ஆளாக்குபவர்கள் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா அவசர வேண்டுகோள் ஒன்றினை விடுத்துள்ளார்.

(ஊடக பிரிவு)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)