இத்தாலியில் இருந்து மேலும் 300 இலங்கையர்கள் இன்று இரவு வருகை

Rihmy Hakeem
By -
0
இத்தாலி மற்றும் தென் கொரியாவில் இருந்து வந்த 572 இலங்கையர்கள் இன்று காலை தனிமைப்படுத்தும் மத்திய நிலையங்களுக்கு அனுப்பப்பட்டிருப்பதாக விமான நிலைய மற்றும் விமான சேவை இலங்கை நிறுனத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் ஜி.எ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

இன்று இரவு மேலும் 300 பேர் அங்கிருந்து வர இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்த நாடுகளில் இருந்து வரும் எவரும் தனிமைப்படுத்தும் மத்திய நிலையங்களுக்கு உட்படுத்தப்படாமல் வெளியேறுவதற்கு எந்த வகையிலும் இடமளிக்கப்படமாட்டாது என்றும் அவர் கூறினார்.

இன்று வந்த பயணிகள் தனிமைப்படுத்தும் நிலையங்களுக்கு செல்வதை நிராகரித்து விமான நிலைய வளவில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் தமது வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட முடியும் என்று தெரிவித்துள்ளனர். இவர்களின் கோரிக்கைக்கு அமைய செயற்பட்டால். வீடுகளில் உள்ள ஏனையோருக்கும் இந்த நோய் பரவக்கூடிய சூழ்நிலை உண்டு என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)