இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளர்களின் எண்ணிக்கை 82

Rihmy Hakeem
By -
0
கொவிட் - 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றினால் பீடிக்கப்பட்டுள்ள 04 பேர் இன்று அடையாளங்காணப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

இதுதொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக கலுவேவ விடுத்துள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:
 ஊடக அறிக்கை
இன்றைய தினத்தில் (2020.03.22) கொரோனா வைரசு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நோயாளர்களின் எண்ணிக்கை 04 ஆகும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க ஊழுஏஐனு 19 பரவுவதை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தில் உறுதி செய்தார். இதற்கமைவாக இலங்கையில்; பதிவான சீனப் பெண்ணுடன் மொத்த கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளர்களின் எண்ணிக்கை 82 ஆகும் என அவர் மேலும் தெரிவித்தார்.
நாலக கலுவேவ
அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம்

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)