EPF பெற்றுக்கொள்வதற்காக ஒன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியும் (Link இணைப்பு)

Rihmy Hakeem
By -
0

தற்பொழுது ஏற்பட்டுள்ள கொரோனா வைரசு பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக ஊழியர் சேமலாப பயன்களை கோருவோருக்கு இலத்திரனியல் முறை மூலம் தமது விண்ணப்பத்தை தொழில் திணைக்களத்திற்கு சமர்ப்பிப்பதற்கான முறையொன்று தயபாரிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தொழில் ஆணையாளர் நாயகம் விடுத்துள்ள அறிக்கை பின்வருமாறு:
2020.03.20
தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம்
அரசாங்க தகவல் திணைக்களம்
ஊழியர் சேமலாப நிதி நன்மைகளை பெற்றுக்கொள்வதற்காக விண்ணப்பித்தல்
தற்பொழுது ஏற்பட்டுள்ள கொரோனா வைரசு பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக ஊழியர் சேமலாப பயன்களை கோருவோருக்கு இலத்திரனியல் முறை மூலம் தமது விண்ணப்பத்தை தொழில் திணைக்களத்திற்கு சமர்ப்பிப்பதற்கான முறையொன்று தயபாரிக்கப்பட்டுள்ளது. இதற்கான சகல ஆலோசனைகளும் www.labourdept.gov.lk என்ற எமது இணையதளத்தில் பெற்றுக் கொள்ள முடியும் என்பதை தயவுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இது தொடர்பில் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் மூலம் பொது மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமாயின் மிக்க நன்றி
ஏ விமல வீர
தொழில் ஆணையாளர் நாயகம்
(அரசாங்க தகவல் திணைக்களம்)


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)