(அப்ரா அன்ஸார்)
உலக நீர் நாள் ஐக்கிய நாடுகள் அமைப்பின் தீர்மானத்திற்கு அமைவாக ஆண்டுதோறும் மார்ச் மாதம் 22 ஆம் திகதி உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. 1992ஆம் ஆண்டில் பிரேசிலில் ரியோடி ஜெனிரோட நகரில் நடைபெற்ற சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி குறித்து நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பேரவை கூட்டத்தொடரில் வைக்கப்பட்ட இருபத்தி ஓராம் நூற்றாண்டின் செயல் திட்டத்தின் படி 1993 ஜனவரி 18ஆம் திகதி 47வது ஐக்கிய நாடுகள் பேரவை கூட்டத்தொடர் 193 மூன்றாம் தீர்மானத்தை நிறைவேற்றியது. அத்துடன் 1993ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டின் மார்ச் மாதம் 22ம் திகதி உலக நீர் வள நாளாக பிரகடனப்படுத்தப்பட்டது. நீர் வளத்தின் ஒட்டுமொத்த திட்டத்தையும் நிர்வாகத்தையும் மேம்படுத்தி நீர் வள பாதுகாப்பை வலுப்படுத்தி நாள்தோறும் கடுமையாகி உள்ள நீர் பற்றாக்குறை பிரச்சினையைத் தீர்ப்பது என்பது தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் நோக்கமாகும்.
இலங்கையின் பெரும் வளமாக காணப்படுவது தரைக்கீழ் நீர் ஆகும். நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்டதால் மத்திய மலைநாட்டில் இருந்து பாயும் ஆறுகள், மழைவீழ்ச்சிகளின் செல்வாக்கினால் தரைக்கீழ் நீர்வளம் சிறப்பாக காணப்படுகிறது. தரைக்கீழ் நீர்வளத்தை ஆழமற்ற கிணறுகள் .................... கிணறுகள், ஆழ் கிணறுகளில் இருந்து வெளியே எடுக்கப்பட்டு கைத்தொழில் உற்பத்திகள் விவசாயம் அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் ஆழமற்ற கிணறுகள் மூலம் நீர் பெறப்படுகின்றது.நைஸ் பாறை கிரனைட் கருங்கல் போன்ற அடித்தளப் பாறைப்படைகளை கொண்டுள்ள பிரதேச ஆற்றுச் சமவெளி,வண்டல் சமவெளிப் பிரதேசங்களில் ஆழமற்ற கிணறுகள் மூலம் நன்னீர் பெறப்படுகின்றது...இலங்கையின் உலர்வலயப் பகுதியில் அதிகளவான குழாய் கிணறுகள் 100-300அடி வரை துளையிட்டு நீரினைப் பெற்றுக்கொள்ள முடிகின்றது.புத்தளம் வனாத்தவில்லு ,மன்னார் முருங்கன் பிரதேசங்களில் அதிகளவு நீர் பெறப்படுகின்றது.
புத்தளம் ,பரந்தன் ,முல்லைத்தீவை இணைக்கும் கோட்டிற்கு தெற்காக உள்ள பிரதான நிலப்பகுதியில் சுண்ணக்கற்படை ஆழமானதாக காணப்படுகின்றது.இதனால் இப் பகுதிகளில் அதிக செலவில் குழாய்க் கிணறுகள் அமைக்கப்படுகின்றது.
இலங்கையின் நீர்வள மாசடைதலானது பல்வேறு வழிமுறைகள் மூலம் இடம்பெற்று வருகின்றது.தரை மேற்பரப்பு,தரை கீழ் என மாசடைகின்றதை காணலாம்.நீருடன் பல்வேறு கழிவுப் பொருட்கள் சேரும் போது நீர் தன் இயல்பிலிருந்து மாற்றமடையும் போது அது மாசடைந்த நீராக கருதப்படுகின்றது.இலங்கை சிறந்த நீர் வளத்தை கொண்ட நாடாக இருப்பினும் நன்னீர் மாசடைவால் மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.இயற்கை முறையில் நீர் மாசடைதல்,மனித நடவடிக்கையினால் நீர் மாசடைதல் என இரு வழிகளில் நன்னீர் மாசடைந்துள்ளதை இன்று காணக்கூடியதாக உள்ளது.
இலங்கையில் பாதுகாப்பான குடிநீரைப் பெறுவோர் 78%ஆகவும் குழாய் நீரைப் பெறுவோர் 34.5%ஆகவும் காணப்படுகின்றது.நாட்டில் பல பகுதிகளில் நல்ல நீரினைப் பெறமுடியாமல் மாசடைந்த நீரினையும் உவர் நீரினையும் பயன்படுத்தி வருகின்றனர்.இதனால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது....அதாவது அண்மைக்காலமாக களுத்துறை மாவட்டத்தில் களுத்துறை ,மக்கொனை,பேருவளை , அளுத்கமை மற்றும் தர்கா நகர் பிரதேசங்களில் குடி நீர் பிரச்சினை நிலவி வருகின்றது .இதனால் மக்கள் பல அசௌகரியங்களுக்கு உட்பட்டுள்ளார்கள்.பாதையோரங்களில் தண்ணீர் குழாய்கள் வைக்கப்பட்டிருந்தாலும் கூட அவை பற்றாக்குறையாக இருப்பதாக அப்பிரதேச மக்கள் தெரிவித்திருந்தார்கள்.எனவே இன்றைய நாட்டு நிலையில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் வேளையில் அவர்களுடைய குடி நீர் தேவை மேலும் சிரமத்திற்குள்ளாகியுள்ளமை கவலைக்கிடமானது.இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் முகமாக அண்மையில் அப் பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டும் கூட இன்னும் இதற்கான முடிவுகள் எடுக்கப்படவில்லை என்பதே உண்மை.
அத்தோடு இன்று விறுவிறுப்பாக பேசப்படுகின்ற முக்கிய தலையங்கமாக
சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.கோவிட் 19வைரஸ் தொற்றை இல்லாதொழிக்கும் முயற்சியில் முழு உலக நாடுகளும் மேற்கொண்டு வருகின்றது.குறிப்பாக சொல்லப் போனால் கண்ணுக்கு புலப்படாத வைரஸ் ஒட்டு மொத்த மக்களையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதை பார்க்க முடிகின்றது.இந்நிலையில் இலங்கையின் நிலையை எடுத்துக்கொண்டால் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.இந்நிலையை கட்டுப்படுத்த அரசினால் பல முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளதை காணலாம் இருந்தும் எல்லை மீறிய ஆட்டமாகவே உள்ளது...கோவிட்19வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்புப் பெற மக்களுக்கான விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டுள்ளது அதாவது அடிக்கடி இரு கைகளையும் சவரக்காரம் இட்டு கழுவுதல்,வெளிப்பயணங்கள் ,மக்கள் ஒன்று கூடல் நிகழ்ச்சிகள் முதலானவை தடுக்கப்பட்டுள்ளது....
இந்தநிலையில் தென் கொரியாவில் உள்ள சியோங்னமில் உள்ள தேவாலயத்தில் மார்ச் 8ம் தேதி, கொரோனாவை தடுக்க சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதில் 90 பேர் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். வழிபாட்டின் முடிவில் அனைவருக்கும் ஒரே பாட்டிலில் புனித நீர் வழங்கப்பட்டது. பாட்டிலில் இருந்த புனிதநீரை வாய்க்குள் படும்படி கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வழிப்பாட்டில் பங்கேற்றவர்கள் அடுத்தடுத்து உடல்நிலை சரியில்லாமல் போனது. உலகம் முழுவதும் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் உடல்நிலை சரியில்லாத நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவில் வழிப்பாட்டில் பங்கேற்றவர்களில் பாதிரியார், அவரது மனைவி உட்பட 46 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
புனித நீரை கையால் தொட்டு பாதிரியார் வாயில் ஊற்றி உள்ளார். இதன் மூலம் கொரோனா பரவியது தெரிய வந்துள்ளது.
இது குறித்து பாதிரியார் கிம் கூறுகையில், நடந்த சம்பவத்திற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எல்லா பழியையும் பொறுப்பையும் நானே ஏற்றுக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.
எனவே மக்கள் இவ்வாறன நடவடிக்ககைளிலிருந்து விலகிக் கொள்வது தற்போதைய நிலையில் சாலச் சிறப்பாக இருக்கும்...அத்தோடு மக்கள் கொதித்தாரிய நீர் பருகுதலை வழக்கமாக்கிக் கொள்வதோடு ,நோய் அறி குறி தென்பட்டவர்களிடம் இருந்து விலகி இருப்பது பொருத்தமானதாக இருக்கும்.