9 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தின

Rihmy Hakeem
By -
0
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்காக, ஒன்பது சுயாதீனக் குழுக்கள், கட்டுப்பணத்தைச் செலுத்தியுள்ளன.
வன்னி, யாழ்ப்பாணம், களுத்துறை, மட்டக்களப்பு போன்ற மாவட்டங்களிலேயே, இந்தச் சுயாதீனக் குழுக்கள், கட்டுப்பணத்தைச் செலுத்தியுள்ளன.
வன்னி தேர்தல் தொகுதிக்காக நாமல் லியனபத்திரண, நீல் சாந்த, எம்.பி.நடராஜா ஆகியோர், சுயாதீனக் குழுக்களாகக் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில், மயில்வாகனம் விமல்தாஸ், ஐங்கரநேசன் பொன்னுதுறை, விக்டர் அன்டனி வில்லியம்ஸ் ஆகியோர் தலைமையிலான மூன்று சுயாதீனக் குழுக்கள், கட்டுப்பணத்தைச் செலுத்தியுள்ளன.
களுத்துறை மாவட்டத்தில், உடவத்​தகே மஹிந்த சில்வா என்பரின் சுயாதீனக் குழு, கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து, ரம்ழான் மொஹமட் இம்ரான், அசனார் மொஹமட் அஸ்மி ஆகியோர், தங்களுடைய சுயாதீனக் குழுக்கள் சார்பில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
தமிழ் மிரர் 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)