தேர்தல் சட்டங்களைப் பகிரங்கமாக மீறிவரும் குருநாகல் வைத்தியசாலை பணிப்பாளர் மீது ஆணையகத்தில் புகார்

Rihmy Hakeem
By -
0
குருநாகல் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஏ.எம்.சரத் வீரபண்டார அண்மைய நாட்களில் பொதுத்தேர்தலை இலக்கு வைத்து பல்வேறு பிரச்சார நடவடிக்கைகளை ஈடுபட்டு வருகின்றமை அண்மைக் காலங்களில் அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. மேலும் தாபன விதிக்கோவையின் படி அரச ஊழியர்களில், பதவி நிலையிலுள்ள ஊழியர்கள் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட முடியாது. 

ஆனால் அவர் இந்த நாட்களில் விகாரைகள் மற்றும் பல இடங்களில் கூட்டங்களை நடாத்தியும் பங்குபற்றியும் வருவதுடன், தாபன விதிமுறைகளையும் தேர்தல் விதிமுறைகளையும் அப்பட்டமாக மீறியுள்ளார்.

இதனையடுத்து "தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் (CMEV)" சரத் வீரபண்டார அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும் படி தேர்தல்கள் ஆணையகத்திற்கு கடிதம் ஒன்றை ஆதாரங்களையும் இணைத்து அனுப்பியுள்ளது. 

மேலும் குருநாகல் வைத்தியசாலையின் டாக்டர் ஷாபி மீதான இனவாத நடவடிக்கைளின் பிரதான மூலகர்த்தாவாக சரத் வீரபண்டார கருதப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

அவரது பேஸ்புக் பக்கம் - https://www.facebook.com/DrSarath-Weerabandara-105479324381092/

கடிதங்களின் இணைப்பு









கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)